கிலோ ரூ.4000..! விலையுயர்ந்த மல்லிகை!

Published:

jasmine - 2026

தொடர் மழை காரணமாகவும், மலர் வரத்துக் குறைவு காரணமாகவும் மல்லிகைப் பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தற்போது மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை வரலாறு காணாத அளவிற்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அண்மையில் வரத்துக் குறைவு காரணமாக தக்காளி விலை உச்சத்தை எட்டி இருந்த நிலையில், தற்போது மல்லிகை கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உச்சத்தை அடைந்துள்ளது.

மேலும்,மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.2000-க்கும்,முல்லை பூ கிலோ ரூ.1500-க்கும்,புச்சி பூ கிலோ ரூ.1200-க்கும்,பட்டன் ரோஸ் கிலோ ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img