வெரைட்டி பக்கோடா பாத்திருப்பிங்க… சொத்தபல்லு பக்கோடா கொடுத்த பேக்கரி…!

அடடே... அப்படியா? கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
pakoda pal - 2026

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஸ்வீட் கடை ஒன்றில் பக்கோடாவிற்குள் சொத்து பல் மறைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொளஞ்சி என்பவர் ஸ்வீட் கடையில் பக்கோடா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது, ​​பக்கோடாவிற்குள் விசித்திரமான ஒன்றைப் பார்த்தபோது, ​​அது சொத்தை பல்லாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

pakoda sothai pal - 2026

இது குறித்து கடை விற்பனையாளரிடம் கொளஞ்சி கேட்டுள்ளார். அதற்கு உரிமையாளர் முகம்மது நபி சரியான பதில் கூறாமல், நீ பார்க்கற இடத்தில் பார்த்துக் கொள் என திமிராகவும் தரக்குறைவாகவும் பேசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.