Dhinasari Home page

தமிழகத்தில் சாலை விபத்தில் பலி இத்தனையா?

சற்றுமுன்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 14,250 பேர் பலியாகியுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு  இன்று இதனை தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு 55 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்திருப்பதாக கூறிய அவர், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக இயக்குதல், சீட் பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிய தவறுதல் போன்றவற்றால் அதிகப்படியானோர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டார்.
சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1,026 பேர் சாலை விபத்துகளில் பலியாகி இருப்பதாக அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.