health tips - 2026

அப்பாச்சி தீர்வு: வயிறு சுத்தமாக, ஆஸ்துமா, தொண்டைக்கட்டு, கரும்புள்ளி, உள்ளுறுப்பு இயக்கம்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

வயிறு சுத்தமாக…

200 கிராம் முலாம் பழத்தை எடுத்து கரைத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி இவற்றை அரைத்துக் கலந்து சிறிது உப்பு சேர்த்து குடிக்க இரண் டொரு முறை பேதியாகி வயிறு சுத்தமாவதுடன் உடலுக்கும் மிகுந்த ஆரோக்கியம் அளிக்கும்.

ஆஸ்துமா நீங்க…

மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பைத் தனியாக எடுத்து வெயிலில் காய வைத்து பொடித்து தேன் கலந்து சுண்டைக் காயளவு, காலை மாலை சாப்பிட்டு வர ஆஸ்துமா தொந்தரவு நெருங்காது.

தொண்டைக் கட்டு நீங்க…

மாந்தளிர் கைப்பிடி அளவு எடுத்து கஷாயம் வைத்து தேன் கலந்து சாப்பிட தொண்டைக் கட்டு நீங்கும். சுண்ணாம்புடன் தேன் சேர்த்துக் குழப்பி தொண்டைக் குழியின் வெளிப்புறத்தில் தடவினால் தொண்டைக் கட்டு குணமாகும்.

முகத்தில் கரும்புள்ளியா?

எலுமிச்சம்பழச்சாறு, கசகசாப்பொடி, தேங்காய்ப்பால் மூன்றையும் கலந்து முகத்தில் பூசி ஊற வைத்து காய்ந்த பின் பயத்தமாவு கொண்டு முகம் கழுவி வர முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிங்கு போல் மாறும்.

உள்ளுறுப்புகள் சரிவர இயங்க…

இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகள் சரிவர இயங்க எலுமிச்சம்பழச்சாற்றில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து வாரம் மூன்று நாள்கள் அருந்துவது நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.