Dhinasari Home page

உக்ரைனில் தமிழக மாணவர்கள் மீட்பு குறித்து வெளியுறவு அமைச்சருடன் தமிழக குழு சந்திப்பு

சற்றுமுன்

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு அமைத்த சிறப்பு குழுவினர், டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்தித்து , தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி., திருச்சி சிவா கூறியதாவது, உக்ரைனில் சிக்கி உள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். அங்கிருந்து தமிழகத்தை சேர்ந்த 777 பேர் மட்டுமே தாயகம் வந்துள்ளனர். மேலும் வர வேண்டி உள்ளவர்கள் குறித்து வெளியுறவு அமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.

அவர்களை மீட்பதற்காக அதிக விமானங்கள் அனுப்பப்படும் என அமைச்சர் தெரிவித்தார். தமிழக மாணவர்கள் மீட்பது தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் ஜெய்சங்கர் கூறியதாக தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.