அதிக வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை.. அடித்து உதைத்த மணமகள் வீட்டார்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
marriage 7 - 2026

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் முஜாமில் என்ற இளைஞருக்கு திருமணம் (Marriage) நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணம் நடைபெற ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென மணமகன், மணமகள் குடும்பத்தாரிடம் 10 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்று கூறி உள்ளனர்.

இதனால் திடீரென சந்தேகம் அடைந்த மணமகள் வீட்டார் அவருடைய பின்னணியை விசாரித்தனர். அப்போது அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனது தெரிய வந்துள்ளது.

ஆதாரபூர்வமாக அதன் புகைப்படங்களும் அவர்களிடம் கிடைத்தன. இதனால் கோபம் அடைந்த பெண் வீட்டார் மணமகனை அடித்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்த வீடியோவை (Social Media) இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் மணமகள் வீட்டார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணமகனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் மணமகன் மணமகள் வீட்டார் அடித்துக் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.