மதுராந்தகம்: கி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 சிற்பங்கள் கண்டெடுப்பு!

vinayaki - 2026

மதுராந்தகம் அருகே இரும்பேடு கிராமத்தில் கி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த சிற்பங்களை ஆய்வு செய்தபோது ‘விநாயகி’ என்ற பெண் தெய்வ வழிபாடு வழக்கத்தில் இருந்தது தெரிய வந்தது.

மதுராந்தகம் அருகே உள்ளது இரும்பேடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த எழில்முருகன் என்பவர் பழங்கால சிற்பங்கள் தங்கள் கிராமத்தில்இருப்பதாக கடந்த ஆண்டு தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தொல்பொருள் ஆய்வாளர்கள் இரா.ரமேஷ், மோ.பிரசன்னா, மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் ப.த.நாகராஜ் ஆகியோர் அந்தச் சிற்பங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது கல்வெட்டுடன் கூடிய 2 சிற்பங்கள் கிடைத்தன. அவை பலகைக் கல்லில் வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்த கிராமத்தில் உள்ள மேட்டுத் தெருவின் தெற்கே நீரோடையில் கிடைத்த முதல் சிற்பம் விநாயகி என்ற பெண் தெய்வத்தின் சிற்பமாகும்.

இரண்டாவது சிற்பம் மேட்டுத் தெருவின் குளக்கரையில் முதல் சிற்பம் போன்ற பலகைக் கல்லில் கல்வெட்டுடன் காணப்பட்டது. இதன் பெயர் சரிவர தெரியவில்லை.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர் ரமேஷ் கூறும்போது, “முதல் சிற்பம் விநாயகி என்ற பெண் தெய்வத்தின் சிற்பமாகும். வேலூரிலும், விழுப்புரம் மாவட்டம் விரிஞ்சியூரிலும் ஏற்கெனவே விநாயகி சிற்பங்கள் கிடைத்துள்ளன.

ஆனால், இரும்பேட்டில் கிடைத்த சிற்பங்கள் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிற்பங்களாகும்.

இரண்டாவது சிற்பத்தை உள்ளூர் மக்கள் துர்க்கை அம்மன் என்று வழிபடுகின்றனர். இது பலகைக் கல்லில் கல்வெட்டுடன் காணப்படுகிறது.

அது ஆண் சிற்பத்தை போன்று உள்ளது. கார்த்திகேயனாக இருக்கலாம் என்று யூகிக்கிறோம். ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஓராண்டு கழித்து மீண்டும் இந்தச் சிலைகளை ஆய்வு செய்ய வந்தோம். அப்போது விநாயகி சிலை அருகே மேலும் ஒரு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இது லகுலீசர் சிற்பம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த 3 சிற்பங்களும், அதில் உள்ளகல்வெட்டு எழுத்தமைப்பின் அடிப்படையிலும் இந்தச் சிற்பங்கள் கிபி5-ம் நூற்றாண்டு மற்றும் 6-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சிற்பங்கள் 1,500 ஆண்டுகள் பழமையானது.

இந்தச் சிற்பங்களில் ‘செயம் பட்டமுத்திர வரிகன் மடவதி’ என்ற கல்வெட்டுவாசகம் காணப்படுகிறது. இந்த ஊரைச் சேர்ந்த முத்திர வரிகன் மடவதி என்பவர் தான் பெற்ற வெற்றியின் நினைவாக இந்தச் சிலைகளை செய்து கொடுத்துள்ளார் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.” என்றார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories