பிரிட்ஜில் வைத்து விற்ற பழைய பரோட்டா பறிமுதல்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் நெல்லை
parotta
parotta

நெல்லை மாநகர் பகுதியில் விற்பனை ஆகாத பரோட்டாக்களை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து அடுத்த நாள் விற்பனைக்கு பயன்படுத்தியதாக வந்த புகாரில் உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 50 கிலோவுக்கும் மேற்பட்ட பரோட்டா , வேதிப் பொருள் கலந்த கலர் பொடிகள் , அஜினோமோட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள் , உணவு விடுதிகள் , சிற்றுண்டி ஆகிய இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என பரிசோதிக்க உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே சமூக வளைதளங்களில் பரோட்டா கடைகளில் விற்பனையாகாத பரோட்டாக்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து அடுத்த நாள் அதனை தண்ணீரில் நனைத்து சூடு செய்து விற்பனைக்கு வைக்கும் காட்சிகள் வைரலானது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நெல்லை மாநகர் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர் .

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சங்கரலிங்கம் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் பாளையங்கோட்டை, தச்சநல்லூர் , மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் பரோட்டாக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

பாளையங்கோட்டையில் ஒருகடையில் குளிர்சாதனப் பட்டியில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ பரோட்டாவும் , மேலப்பாளையத்தில் ஒரு கடையில் 10 கிலோ பராட்டா மற்றும் பல்வேறு கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு சுமார் 50 கிலோவுக்கும் மேற்பட்ட பரோட்டா மற்றும் வேதிப் பொருட்கள் கலந்த அஜினோமோட்டா மற்றும் கலர் பொடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர் .

மக்களுக்கு தீங்கு விளைக்கும் வகையில் பழைய உணவுப் பொருட்களை பயன்படுத்தும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.