பொங்கலுக்கு ஊருக்கு போறிங்களா..? சென்னையிலிருந்து 4 சிறப்பு ரயில்கள்!

train 1 - 2026

பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன் படி
தாம்பரம் – திருநெல்வேலி – தாம்பரமவண்டி எண் 06001 தாம்பரம் – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் 2022 ஜனவரி 12 புதன்கிழமை தாம்பரத்திலிருந்து இரவு 09.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06002 திருநெல்வேலி – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 13 வியாழக்கிழமை திருநெல்வேலியிலிருந்து இரவு 09.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் – சென்னை எழும்பூர்
வண்டி எண் 06005 சென்னை எழும்பூர் நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து ஜனவரி 13 வியாழக்கிழமை அன்று மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06006 நாகர்கோவில் – சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 14 அன்று மாலை 03.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாகர்கோவில் – சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில் (06006) மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

நாகர்கோவில் – தாம்பரம் – நாகர்கோவில்
வண்டி எண் 06004 நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 16 ஞாயிற்றுக் கிழமை நாகர்கோவிலில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06003 தாம்பரம் – நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 17 திங்கட்கிழமை அன்று தாம்பரத்திலிருந்து மாலை 03.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 04.20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலி – தாம்பரம் – திருநெல்வேலி தாமிரபரணி எக்ஸ்பிரஸ்
வண்டி எண் 06040 திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு அம்பா சமுத்திரம், பாவூர்சத்திரம் தென்காசி, ராஜபாளையம் வழியாக சென்று மறுநாள் காலை 07.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06039 தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜனவரி 17 காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் வழியாக சென்று இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

மேற்கண்ட சிறப்பு ரயில் விபரம்,முன்பதிவு குறித்து தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories