உலகில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66.31 கோடி..

Published:

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.31 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 63 கோடியே 55 லட்சத்து 11 ஆயிரத்து 666 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 90 ஆயிரத்து 752 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிஎப்7 வகை கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏறத்தொடங்கியுள்ளது. தினசரி பதிப்பு 200 க்கும் கீழாக பதிவாக வந்த கொரோனா பாதிப்பு இந்த வர தொடக்கத்தில் மீண்டும் 200 ஐ தாண்டியது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3552- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 698 ஆக உயர்ந்துள்ளது.

1062703 covid 19 03092021 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img