images 81 - 2026

தென் தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

அடடே... அப்படியா?
images 81 - 2026

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும்.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 27, 28 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வரும் மார்ச் 1ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.