நடிகை ஸ்ரீதேவி மரண விவகாரத்தில் வழக்கம் போல் வாட்ஸ் அப்களில் வதந்திகளும் திடீர் பகீர் கேள்விகளும் வலம் வரத் துவங்கியுள்ளன.

உறவின் முறை திருமணத்துக்காக துபைக்குச் சென்ற நடிகை ஸ்ரீதேவி, அங்கு ஹோட்டல் ஒன்றில் குளியலறையில் வழுக்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து மரணம் அடைந்ததாகக் கூறப் படுகிறது. அவரது ரத்த மாதிரியில் ஆல்கஹால் கலக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து துபை போலீஸார் உடற்கூறாய்வு குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். மேலும், துபை டைரக்டர் ஆஃப் ப்ரிவெண்டிவ் மெடிசின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திடீர் மயக்கம் காரணம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

sridevi accd - 2026

இந்நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, சில கேள்விகளை முன்வைத்து வாட்ஸ் அப் வதந்திகள் பரவலாக உலா வருகின்றன. ஸ்ரீதேவி மது அருந்தவில்லை என்றும், அவ்வாறு கூற நிர்பந்திக்கப் பட்டுள்ளதாகவும், போனி கபூரை மிரட்டி கையெழுத்து பெறப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. அந்தத் தகவல் இதுதான்…

அதிர்ச்சி அளிக்கும் உண்மை..

ஸ்ரீ தேவி உண்மையில் பாத் ரூமில் வழுக்கி விழுந்திருக்கிறார்.. ஊடகங்கள் சொல்வது போல் அவர் மது அருந்தவில்லை… வழுக்கி விழுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கிறார்.. ஆனால் அந்த ஹோட்டல் நிர்வாகம் உடனே தூதரகம் சென்று அடுத்த நாட்டுடன் நாம் அடி பணியக் கூடாது என்றும் அப்படி பணிய நேரிட்டால் கோடிக் கணக்கில் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும்… நம்நாடு ஒருபோதும் அடுத்த நாட்டுக்குப் பணியக் கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.. உடனடியாக போனி கபூர் ஹோட்டல் நிர்வாகத்தை மிரட்டி இருக்கிறார்.. எனக்கு பணமே வேண்டாம் ஆனால் வழுக்கி விழுந்தமைக்கு பதில் சொல்ல வேண்டும் என்று அழுது கதறி இருக்கிறார்… உடலை மருத்துவமனையில் வைத்துக் கொண்டு உடலைத் தர மறுத்ததால்… அவர் நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள் என்று கையெழுத்து இட்டு வீசி இருக்கிறார். இதனை அங்கே வேடிக்கைப் பார்த்த ஒருவர் உடனடியாக அவரையும் மடக்கி பநம் கொடுத்தாகக் கூறப்படுகிறது..

குளியலறையை உடைக்க நேரிட்டமைக்காக மேலும்.பணம்.கேட்டுள்ளனர்.. திருமண விழாவிற்கு அழைத்தவர்களும் போனி கபூர் காலில் விழுந்துள்ளார்கள்.. நீங்கள் பிரச்சினை செய்தால் இந்த நாட்டில் நாங்களும் இனி நிம்மதியாக வாழ முடியாது.. தேவை இல்லாத குற்றங்கள் சுமத்தி மரண தண்டனை தருவார்கள். எப்படியும் செத்தவர் மீண்டு வரப்போவதில்லை..ஆனால் வாழ வேண்டியவர்கள் வாழ வேண்டுமல்லவா என்றும்.கதறி அழுதுள்ளனர்..

உண்மை ஓயாது..இறந்த  பின்னும் இந்தியப் பெண்ணிற்கு அவச் சொல் தருவது அவமானம்.. என்று புலம்புகின்றனர்  உண்மை விரும்பிகள்.

– இவ்வாறு கூறப்பட்டுள்ள இந்தத் தகவல்களைப் படித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

sridevi01 - 2026

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் நீள்கிறதே என்று பரவலாக விவாதங்கள் சூடு கிளம்பிய நிலையில், ஸ்ரீதேவி மரண விவகாரத்தை துபை போலீஸார் அந்நாட்டு பொது நீதித்துறையிடம் மாற்றியுள்ளது. பொதுவாக இது போன்ற இறப்பு வழக்குகளை துபை பொது நீதித்துறைதான் சட்ட நடவடிக்கையின் பொருட்டு கையாளும்.

இதனை கல்ஃப் நியூஸ் செய்தி தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending