‘அட்மின்’களுக்குத்தான் எத்தனை அவப்பெயர்?: ‘பீப் பாடல் வெளியீடு’ பொறுப்பும் இப்போது பட்டியலில்!

t rajendar - 2026

சென்னை:

இப்போதெல்லாம் ‘அட்மின்’கள் படாத பாடு படுகிறார்கள். சமூக வலைத்தளங்களில், வி.ஐ.பி.,கள், சினிமா துறையினர், அரசியல்வாதிகள் இயங்குவது இப்போது அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்களால் அதிக நேரத்தை செலவிட முடியாத போது, அட்மின் என யாரையாவது அமர்த்திக் கொள்கின்றனர். அட்மின்கள் சிலர் ஊதியத்துக்கு உழைக்கின்றனர்.

சில நேரங்களில் அவர்களின் கருத்துகள் சர்ச்சையாகும் போது, பழியை அட்மின்கள் மீது போட்டுவிட்டு, எங்களை அறியாமல் நடந்த தவறு. அந்தக் கருத்தை நீக்கிவிட்டேன், அட்மினையும் நீக்கிவிட்டேன் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

இது முன்னர் ஸ்டாலினால் கையாளப் பட்டது. இந்துப் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன போது, இது நான் சொல்லவில்லை, அட்மின் செய்தது என்று பழியைப் போட்டார். அவரது அடிச்சுவட்டில், பாஜக.,வின் ஹெச்.ராஜா, ஈ.வே.ரா. சிலை குறித்த கருத்து, தான் போடவில்லை, அட்மின் போட்டது என்று கூறி விலகப் பார்த்தார்.

இப்போது இந்த ஸ்டைலை பின்பற்றியிருக்கிறார் டி.ராஜேந்தர். லதிமுக., கட்சித் தலைவராக மீண்டும் களம் இறங்கியிருக்கும் டி.ஆர்., ‘பீப்’ பாடலை வெளியிட்டது அட்மின்தான் என்று கூறியிருக்கிறார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

தமிழ் சினிமா துறையில் ஏதாவது கருத்தைக் கூறி சர்ச்சைகளில் சிக்குபவர் சிம்பு. அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிப் பாடிய ‘பீப்’ பாடல் ஒன்று யு டியூபில் வலம் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களை கேவலப்படுத்தும் விதத்தில் அமைந்த அந்தப் பாடலை எதிர்த்து மாதர் சங்கங்கள் ஆர்பாட்டங்கள் நடத்தின.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தரிடம் பீப் பாடல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த டி.ராஜேந்தர், “பீப் பாடல் விவகாரம், சிம்பு மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட, அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென நடத்தப்பட்ட ஒரு போர். பொதுவாக இசையமைப்பாளர்கள் டம்மி வார்த்தைகளைப் போட்டுத்தான் பாடல்களை உருவாக்குவார்கள். அப்படி உருவாக்கி வைத்திருந்த ஒரு பாடலை ஒருவர் எடுத்துச் சென்று வெளியிட்டுவிட்டார். அந்தப் பாட்டை திருடி எடுத்துக் கொண்டு போய், திருட்டுத்தனமாகச் செய்து அவரை மாட்டி விட்டார்கள். இந்த உலகத்தில் வைட்டமின் ‘ப’வுக்காக எத்தனை பேர் இருப்பார்கள். பணம் பாதாளம் வரை பாயும். அப்படி ஒரு அட்மின் தான் அந்தப் பாடலை வெளியிட்டு விட்டார்” என்றார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாவம் அட்மின். ஆனால், அந்த பீப் இடைவெளியில் இட்டு நிரப்ப அந்தச் சொல்தான் கிடைத்ததா? செய்தியாளர்கள் யாரும் கேட்கவில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories