இன்றைய தக்காளி சட்னியே நாளைக்கு எல்லாருக்கும் ரத்தம்.. அதிகம் படிச்சி வெளிநாட்டுக்கெல்லாம் போற பொண் ணுக்கு விமானத்தில் கத்தி கலாட்டா பண்ற துக்கு சட்டப்படி தப்புன்னு தெரியாதா?
உண்மையிலேயே பாசிச பாஜக ஒழிகன்னு சொல்ல ணும்னா எங்கே சொல்லியிருக்கணும்? விமான நிலை யத்தைவிட்டு தமிழிசை வெளியே வந்து கார்ல ஏறும் போது காரை மறிச்சி தெருவில் படுத்து உருண்டு எதிர்ப்பு தெரிவிச்சிருக்கணும்..
இல்லை நிர்மலா சீத்தாராமன், எடப்பாடி அன்ட்கோ மாதிரி போற பிளைட் டோ, அட்லீஸ்ட் ஒரு டிஜிபி போற பிளைட்லையாவது போய் கோஷம் போட்டிருக்கணும்..
இன்னொரு அட்லீஸ்ட்.. வெளிநாட்டுக்கு போற ஏதா வது ஒரு இண்டர்நேஷனல் பிளைட்லயாவது சீட் போட்டுக் கிட்டுபோய் கோஷம் போட்டிருக்கணும்..
பொண்ணோட அப்பா என்னடான்னு ஜாதிப்பிரச் சினை யே இல்லாத ஒரு மேட்டர்ல ரொம்ப கச்சிமாக, நான் இன்ன ஜாதியை சேர்ந்தவன்னு பரிதாபத்தை இன் வெஸ்ட் பண்றாரு.. பாஸ்போர்ட் முடக்க சதின்றாரு..
தகராறு ஆகி போலீஸ் கேஸ்ஆனா பாஸ்போர்ட்டுக்கு சிக்கல் வரும்னுகூடவா டாக்டருக்கு படிச்ச அவருக்கு தெரியாதா? என்னதான் படிச்சாங்கன்னே தெரியலையே
என்ன கோணங்கித்தனம் பண்ணாலும் கண்டுக்காம தமிழிசை போயிருந்தா இன்னைக்கு சோபியா விவகாரம் சப்பை மேட்டரா போயிருக்கும்.. ஆனா தமிழிசைக்கு இந்த மாதிரி மேட்டர்களை எதிர் கொள்ளத் தெரியல.. கசகசன்னு ஆக்கிட்டாங்க.
பாசிச பாஜக ஒழிகன்னு கத்துவதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு.. ஆனால் அந்த கோஷத்தை போடக் கூடாத இடங்களும் உண்டு என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்..பிளைட்ல பாசிச பாஜக ஒழிகன்னு குரல் கொடுத்தவரு, நீதிமன்றத்தில் குரல் கொடுத்து பார்த்தி ருக்கலாமே? கோர்ட்டும் பப்ளிக் ஆக்சஸ் ஆவற இடம்தானே..
சட்ட விரோதமான ஒரு செயலைவிட்டு அதில் மாட்டிக்கொள்ளாமலிருக்க வேறுமாதிரி விளம்பரம் ஆக்குவதை ஆதரிக்கும் போக்கு எங்கே கொண்டுபோய் விடும் என்றே தெரியவில்லை..
இன்றைக்கு இதை பல தலைவர்களும் அரசியல் களத்திற்காகவும் பாஜக எதிர்ப்பு என்ற ஒரே ஒற்றை காரணத்திற்காக சட்டவிரோத காரியத்தை மறக்க டிச்செய்து அரசியல் சாயம் பூசுவதும் நல்லதல்ல..
நாளைக்கு பல்வேறு அரசியல் கட்சி பார்ட்டிங்க, அமைப்பை சேர்ந்தவங்க பஸ்ல, கத்துவாங்க, டிரெயின்ல கத்துவாங்க, எல்லாத்தையும் கருத்து சுதந்திரம்னு ஒத்துக்குவீங்களா?
அவ்வளவு ஏன், கத்தியோட பஸ்ல சுத்தற சில பசங்ககூட என்ன வென்னாலும் பண்ணிட்டு கடைசியா பாசிச அரசு ஒழிகன்னு சொல்லுவான். அப்புறம் போலீஸ்பிடிச்சிகிட்டு போனா, கருத்து சுதந்திரத்தை பறிக்கக்கூடாதுன்னு குரல் கொடுப்பீங்களா?
மாவட்ட கலெக்டர் கிட்ட கைநீட்டி அதட்டி பேசலாம். அவரைவிட பல மடங்கு பவர் உள்ள சீஃப் செகரெட் டரிகிட்ட சத்தம்போட்டு பேசலாம்.. ஆனால் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு சாதாரண ஏட்டு முன்னாடிகூட கை நீட்டி பேசமுடியாது.. விஷயம் தெரிஞ்சவங்க அங்கெல் லாம் பொங்கமாட்டாங்க? ஏன்? எல்லாருக்குமே தெரியும்..
பாசிச பாஜக ஒழிக என்று சொன்ன பெண்ணை எதிர்க் கவில்லை.. அதை பலரும் பயணிக்கும் ஒரு பயணிகள் விமானத்தில் விதிமுறைகளை மீறி சொன்ன பெண் ணைத்தான் விமர்சிக்கிறோம்.. என்ன சொன்னார் என்ப தோடு எந்த இடத்தில் எந்த சந்தர்ப்பத்தில் சொன்னார் என்பதையும் சேர்த்துப்பார்த்தால் உண்மை மண் டைக்கு உரைக்கும்..
முதலில் நாட்டின் சட்டத்தை மதிக்கக்கற்றுக் கொள் ளுங்கள்.. அப்புறம் அதன் மீதேறி கருத்து சுதந்த திரத்தை பத்தி பேசலாம்..
– ஏழுமலை வேங்கடேசன்




