சப்பைக் கட்டு கட்டும் சோபியாவின் தந்தை!

Published:

sofia - 2026

விமானத்தில் கோஷம் போட்டுவிட்டு சட்டம் தெரியவில்லை என்றால் விட்டு விடுவார்களா?

தொலைக் காட்சி மீடியா பேட்டியில் அந்த பெண்ணின் அப்பா நிறைய சப்பைக் கட்டு கட்டுகிறார். பெண்ணைப் படிக்கத் தான் கனடாவுக்கு அனுப்பினேன் என்கிறார். அரசியல் வேண்டாம் என்கிறார். ஆனால் தமிழிசை பயணம் செய்வது தேவேந்திர குல வேளாளரை பாஜகவில் இணைக்க என்கிறார். அரசியலே இல்லை என்று சொல்லிவிட்டு ஏன் மாற்றி மாற்றி பேசுகிறார்.

பிறகு மகள் ட்விட்டர், முகநூலில் இல்லை என்கிறார். பிறகு ட்விட்டர் பற்றி சொன்னதும் எனக்கு தெரியாது என்கிறார்.

எதையோ எதிர்பார்த்து எதையோ செய்துவிட்டு இப்போது கைது, காவல், நீதிமன்றம் என்று வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்பது நன்றாக புரிகிறது.

அந்த பெண்ணுக்கு சொல்லப்பட்டது நீ கோஷம் போடு. தமிழிசை கண்டு கொள்ளமாட்டார்கள். என்பதாக இருந்திருக்கலாம்.

இப்போது நிலைமை கைமீறி போனதில் அலறுகிறார் அந்த பெண்ணின் தந்தை. இவர் ஒரு அரசு மருத்துவ அதிகாரியாக வேலை செய்து ஒய்வு பெற்றவர். விதிகள் சட்டங்கள் தெரியாது என்பது மீறுவதில் இருந்தும், தண்டனையில் இருந்தும் காப்பாற்றாது. Ignorance of Law does not excuse anyone என்பார்கள்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

சட்டம் படித்துவிட்டு என் பெண் கனடா போகவில்லை என்கிறார். படிக்காத கூலி வேலைக்காரர்கள் கூட இப்போது சகஜமாக வெளிநாட்டுக்கு பயணம் செய்கிறார்கள். விமானப் பயணத்தின் போது என்னென்ன கொண்டுபோகவேண்டும் என்பதில் இருந்து எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது வரை தெரியாதவர்களுக்கு தெரிந்தவர்கள் படித்து படித்து பாடம் எடுத்த பிறகு தான் எல்லோருமே விமானப் பயணம் செய்கிறார்கள்.

இந்த பெண் கனடாவில் ஆராய்ச்சி மாணவி. அப்பா சொல்கிறார். இந்தப் பெண்ணுக்கு சட்டம் தெரியாது என்று.

Ignorance of law means want of knowledge of those laws which a person has a duty to know and which everyman is presumed to know. … Ignorantia juris non excusat or Ignorantia legis neminem excusat is a Latin maxim which means “ignorance of the law does not excuse” or “ignorance of the law excuses no one.”

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

வெற்று அரசியலுக்காக கண்ணை மூடிக் கொண்டு தவறை சப்பைக் கட்டு கட்டும் ஸ்டாலின், கமலஹாசன் போன்றோர் எத்தனை முறை விமானப் பயணம் செய்திருக்கிறார்கள் ? அவர்களுக்கு தெரியாதா பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று??

இந்த நிகழ்வில் இருந்து ஒன்று தெரிகிறது. ஒரு சதிவலை பின்னப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் தமிழகத்தின் அரசியல் சூழல் கொதிநிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதில் ஒரு கும்பல் உறுதியாக இருக்கிறது…

அஸ்வின்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img