தாமிரபரணி புஷ்கரம் நடந்தால் ஆறு மாசு அடையும் என்று மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் பாலகிருஷ்ணன் வயிற்றெரிச்சலில் சொல்கிறார். இது கம்யூனிஸ்டின் இயலாமை அல்லது அறியாமை என்றே எடுத்துக் கொள்ளலாம்.
#புஷ்கரம் நடந்தால் குறைந்த பட்சம் 1 கோடி ஹிந்துக்கள் கூடுவார்கள். (சென்ற ஆண்டு காவேரி புஷ்கரணியில் 1கோடி பேர் கூடினர்) அவர்கள் ஒன்றுபட்டால் நஷ்டம் யாருக்கு ?
பாலகிருஷ்ணனுக்கு தெரியத் தொடங்கிவிட்டது. அதனால் ஏற்பட்டுள்ள பயம்!வயிற்றெரிச்சல். #தமிழர் திருநாள் பொங்கல் நடந்தால் எங்கள் வீட்டை சுத்தப்படுத்துவோம் /பலப்படுத்துவோம். அதுபோல நாங்கள் அன்னையாக/தெய்வமாக வழிபடும் தாமிரபரணியை சுத்தப்படுத்துவோம்/ பலபடுத்துவோம்.
1. திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொது லட்சோப லட்ச ஹிந்துக்கள் கூடுகின்றனர் கடல் மாசு அடைகிறதா?
2.சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலை போடும் மாதத்தில் மட்டும் பல கோடி ஹிந்துக்கள் பாம்பை நதியில் நீராடி வழிபடுகின்றனர். நதி மாசுபடுகிறதா?
#பெருவாரியான மக்களின் உணர்வுபூர்வமான விஷயத்தில் பாம்பை நதியில் கடைபிடிக்கும் நடைமுறையை தாமிரபரணி புஷ்காரணியிலும் பின்பற்றவேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் (பாலகிருஷ்ணன் உள்பட) வரவில்லை எனில் 100 -(அல்லது) 200 ஒட்டு கூட கிடைக்காது.
இதை உணராமல் பேசி வருவது உங்கள் போன்றோரின் இயலாமை / அறியாமையை காட்டுகிறது.
ஹிந்து சமுதாயமே நம்மை எதிர்ப்பவர் நடுங்க / பதற ஆரம்பித்துவிட்டார்கள். உன் பணியை வலுவடையச் செய். அதிக எண்ணிகையில் ஹிந்துவை கூடச்செய்!
இது சமய சார்பற்ற நாடு எனவே தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு அரசு நிதி அளிக்கக்கூடாது என்கிறது கம்யூனிஸ்ட்.
#பாரதம் (எ) இந்தியா முழுக்க முழுக்க ஹிந்து நாடு. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது தான் முதன் முதலாக சமய சார்பின்மை வார்த்தை பயன் படுத்தப் பட்டது.
சரி அத விடுங்க பின்னால் சரி பண்ணிக்கலாம்.. சரி இப்போதைய சங்கதிக்கு வருவோம். சமய சார்பற்ற நாடுனா எல்லா சமயத்தையும் ஒன்னா நடத்தணும் அல்லது குறிப்பிட்ட சமயத்துக்கு ஆதரவா இல்லாம நடுநிலையா இருக்கறது அப்படித்தானே.
ஆனா நடப்பது என்ன? #மெக்கா புனித பயணம் போக அரசு நிதி ஒதுக்குகிறது.
#ஜெருசலேம் புனித பயணம் போக அரசு நிதி ஒதுக்குகிறது. #தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு நிதி ஒதுக்கக்கூடாதாம் ஒதிக்கினா சமய சார்புடைய அரசாம்.
என்னடா லூஸுத்தனமா பேசி மக்களை ஏமாத்தப் பாக்குறீங்க
#சர்ச் அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லை.
#மசூதி அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லை
#ஹிந்து கோவில் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கு
அப்படினா என்ன அர்த்தம்? இது ஹிந்து சார்புடைய அரசுதானே. இதை விட வேற விளக்கம் தேவையா?.
இதைவிட கொடுமை என்னன்னா… கோவில் உண்டியல் பணம், கோவில் நிலத்தில் உள்ள கடை வருமானம், நில குத்தகை வருமானம் என அனைத்தும் அரசாங்க கஜானாவிற்கே செல்கிறது.
(சர்ச் /மசூதி வருமானதை அரசாங்கம் எடுக்கமுடியுமா?) #கோவில் வருமானம் லட்சம் கோடி தமிழக அரசாங்கத்திற்கு கிடைக்கிறது.
என்னுடைய கோவில் வருமானத்தில் இருந்து என்னுடைய நதி அன்னைக்கு நிதி ஒதுக்கக்கூடாதா?
– பாலமுருகன்.




