மின் ஊழியரைத் தூக்கிக் கொண்டு ஓடிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குவியும் பாராட்டு!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்

vijayabaskar minister saving wireman - 2026

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையில் மின் கம்பங்கள் அதிகம் சேதமடைந்தன. இவற்றை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் பலர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர் ஒருவர் மேலிருந்து கீழே திடீரென விழுந்து காயம் அடைந்தார்.

காயமடைந்த மின் ஊழியரை, அப்போது அங்கே உடன் இருந்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், உடன் அருகில் இருந்தவர்களும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். பிறகு அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, குணமடைந்து வருகிறார்.

vijayabaskar minister saving wireman2 - 2026

அமைச்சர் விஜயபாஸ்கரின் இந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின. இரவு பகலாக உயிரைக் கொடுத்து, கஜா புயல் பாதிப்புகளை சரி செய்ய வேலைகளைச் செய்து வருகிறார்கள் என்றும், இதிலும் அரசியலைச் செய்யும் மோசமான திமுக.,வினர் மக்களைத் தூண்டிவிட்டு, குளிர்காய்கிறார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப் பட்டன. vijayabaskar minister saving wireman3 - 2026

குறிப்பாக, திமுக ஆட்சியில் அடிபட்டு ரோட்டில் துடித்த காவல்துறை ஊழியரை, அப்போதைய அமைச்சர் தன் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு செல்லாமல் , அங்கே விட்டு விட்டு சென்றார். அவர் அங்கேயே இறந்தும் போனார். திமுகவினர் குணம் எப்பிடி?என்று கேள்வி கேட்டு கேலி செய்கிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.