கார்த்திகை தீபத் திருவிழா! திருவண்ணாமலையில் மகா தேரோட்டம்

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

thiruvannamalaiperuman - 2026

திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை மகா தீபத் திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

மிகப் பழைமை வாய்ந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்றதாக விளங்குவது தீபத்திருவிழா! இது, கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க் கிழமை இன்று மகா தேரோட்டம் நடைபெற்றது. இந்தத் தேரோட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, காவல் உயர் அதிகாரிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

thiruvannamalai ther - 2026

பின்னர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்த, அலங்கரிக்கப்பட்ட அண்ணாமலையார் தேரை பக்தர்கள் பலர் திரண்டு வடம் பிடித்து இழுத்தனர். தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் வைபவம், வரும் 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.