உயிரிழந்த கோயில் காளை: அன்பர்கள் கண்ணீர் அஞ்சலி!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
temple bulluck - 2026

சோழவந்தான் அருகே இறந்த கோயில் காளைக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் காளை காளி எனும் பெயரில், ஊரில் செல்லப் பிள்ளையாக அனைவரிடமும் அன்போடு பழகி வந்தது.

இந்நிலையில் அண்மையில் இக்காளையின் உடல் நலம் பாதிக்கப் பட்டது. அதைக் கண்டு, அந்த கிராம மக்கள் தேவையான மருத்துவ உதவிகள் செய்து வந்தனர்.

temple bulluck1 - 2026

இருப்பினும் இன்று காலை இக்காளை மரணமடைந்தது. இதையறிந்த ஊர் மக்கள் கண்ணீருடன், மாலை, வேஷ்டி, துண்டு அணிவித்து காளைக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், காளியம்மன் கோயில் அருகே கிராம மக்கள் கண்ணீருடன் நல்லடக்கம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.