ஏப்ரல் 22, 2021, 5:35 மணி வியாழக்கிழமை
More

  மோட்சம் அடைய பிரம்மச்சரியம் அவசியமா? ஆச்சார்யாள் பதில்!

  abinav vidhya theerthar 1 - 1

  ஜேஷ்ட மஹா சன்னிதானம் அவர்களிடம் ஒரு சிஷ்யர் கேட்கும் கேள்விகளும் அதற்கு சுவாமிகள் உரைத்த பதில்களும்….
  பிரம்மச்சரியம்:-
  சிஷ்யன்: மோட்சத்தை விரும்புகின்ற ஒருவன் தனது ஆயுள் முழுவதும் பிரம்மச்சாரியாக வாழவேண்டும் என்பது தேவையா?
  ஆச்சாரியாள்: எவன் வைராக்கியமாய் இருந்து மோட்சத்திலே ஈடுபாடு வைத்து உள்ளானோ அவனுக்கு பிரம்மச்சரியம் மிகவும் அவசியம். பார்க்கப்போனால் திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்பது ஒரு பெரிய பந்தம். எவன் உண்மையான பிரம்மச்சாரியாக வாழ்க்கை நடத்துவானோ அவன் தனது மனதைப் பரம்பொருளை அறிவதற்காகவே பயன்படுத்தலாம். இதைக்காட்டிலும் மாறுபட்ட வழியில் வாழும் கிரகஸ்தர்களுக்கு பலவித பொறுப்புகள் இருப்பதால் இது போன்று நடந்து கொள்வது சற்று கடினமானது. மேலும் அது போன்ற வாழ்க்கையை தீவிரமாக ஒருவன் அனுஷ்டானம் செய்ய விடாமல் கெடுதல் விளைவிக்கும்.

  சிஷ்யன்: இப்படி இருக்கும்போது சாஸ்திரங்கள் எதற்காக திருமண வாழ்விற்கு அனுமதி கொடுத்தன?

  ஆச்சாரியார்: பிறந்தவர் அனைவரும் மோட்சகதியே விரும்புவதில்லை மேலும் பிரம்மச்சாரியத்தையே ஆயுள் முழுவதும் கடைபிடிக்க சிலருக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. மீதமுள்ள மக்களும் நல்வழி வாழ்ந்து உத்தம நன்மை அடைய முயற்சி செய்யவும், சாத்திரங்கள் கிருஹஸ்தாசிரமத்தைப் பற்றி சொல்கின்றன. சாத்திரங்களில் அங்கும் பல நியமங்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஆகவே நியமத்தோடு உள்ள கிரக ஸ்தாச்ரம வாழ்வையே சாஸ்திரம் அனுமதிக்கிறது என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும்.

  சிஷ்யன்: ஒருவனுக்கு பிரஜை அல்லது வாரிசு தேவை என்று சாஸ்திரங்களில் சில இடங்களில் கூறப்பட்டிருக்கின்றது இதற்கு ஆச்சாரியர் காரணம் கூறுவார்களா?

  ஆச்சார்யாள்:யாருக்கெல்லாம் மோட்சம் ஒன்று வேண்டும் என்று தீவிரமான விருப்பமும் காமமே இல்லாத மனமும் இருக்கின்றனவோ அப்படிப்பட்ட அவர்களைத் தவிர மற்ற ஜனங்களுக்காக இது போன்ற வாக்கியங்கள் கூறப்பட்டுள்ளன என்பதை சாத்திரங்களை படிக்கும் ஒருவன் அறிந்து கொள்ளலாம் தீவிரமான வைராக்கியம் பெற்றுள்ள ஒருவன் திருமண வாழ்க்கையை பெற்றுக் கொள்ள தேவையில்லை என்பதை சாஸ்திரங்கள் வாயிலாக நாம் அறியலாம் உபநிஷத்தில்,

  ‘யதஹரேவ விரஜேத் க்ருஹாத்வா வனாத்வா’

  என்றைய தினம் தீவிரமான வைராக்கியத்தை அடைகிறானோ அன்றைய தினமே அவன் சன்யாசம் பெற்றுக் கொள்ளட்டும்

  ப்ரஹ்மசர்யாதேவ ப்ரவ்ரஜேத் க்ருஹாத்வா வனாத்வா

  பிரஹ்மச்சர்யத்திலிருந்தோ க்ரஹஸ்தாசிரமத்திலிருந்தோ வானப்பிரஸ்த ஆசிரமத்தில் இருந்தோ அவன் சன்னியாசி ஆகட்டும் என்றும்

  கிம் ப்ரஜயா கரிஷ்யாம:

  பிரஜைகளை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வோம் என்று வாக்கியங்களையும் உபநிஷத்தில் காணலாம்.

  சி: எல்லோரும் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு விட்டால் உலகம் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும் என்பதை போன்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர் இதுபற்றி ஆச்சார்யா கருத்து என்ன?
  ஆச்சாரியாள்: ஆயிரக்கணக்கான ஜனங்களில் ஏதோ ஒருவன்தான் மோட்சத்தை தீவிரமாக விரும்புகிறான். அப்படிப்பட்டவர்களில் ஒரு சிலர்தான் பிரம்மச்சாரிய வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆகையால் நீ சொன்ன இந்த கேள்விக்கு இடமே இல்லை.

  சிஷ்யன்: பிராமணர் அல்லாத மற்ற மக்களும் ஆயுள் முழுவதும் பிரம்மச்சரியத்தை மேற்கொள்ளலாமா?

  ஆச்சாரியாள்: இதிலென்ன சந்தேகம்?

  சிஷ்யன்: மோட்சத்தை மட்டுமே விரும்பமாகக் கொண்டிருந்தால் பெண்களும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதை தவறு என்று கருதுகிறீர்களா?
  ஆச்சாரியாள்: தீவிரமான வைராக்கியம் இருந்தால் பெண்களும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விடலாம். இங்கு இரு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்1. மன அடக்கம் 2 சூழ்நிலை சரியாக இருக்கிறதா என்று கவனித்துக் கொள்ளுதல்.

  சிஷ்யன்: கிருஹஸ்தர்கள் அனைவரும் ஞானத்தைப் பெற்று மோட்சமடைய முடியாது என்றா ஆச்சாரியாள் கருதுகிறார்கள்?

  ஆச்சார்யாள்: இல்லவே இல்லை அவர்கள் நிச்சயமாக மோட்சம் பெறலாம் ஆனால் அவர்களது வழி சற்று கடினமான வழி வெறும் மோட்சத்தை விரும்புபவன் சன்னியாசம் பெற்று வாழ்க்கை நடத்தலாம் ஆனால் இங்கு அவர் செய்வது கடினம் ஆயினும் அவர்கள் ஞானம் பெற முடியாது என்று சொல்வது தவறு. ஜனகர் போன்றவர்கள் கிரகஸ்தர்களாக இருந்தாலும் ஞானிகளாகவே இருந்தார்கள். இதை வைத்துக்கொண்டு யாரும் பிரமச்சாரியாக வாழத் தேவையில்லை என்று கூறினால் அதுவும் தவறு.

  சிஷ்யன்: நாம் இதிகாச புராணங்களில் ரிஷிகளை பற்றி படிக்கின்றோம் அவர்கள் கிரகஸ்தர்களாக இருந்தனர் என்றும் கேள்விப் படுகின்றோம் ஆகவே கிரகஸ்தர்களிலும் எவ்வளவோ பேர் ஞானிகளாக இருந்தனர் என்றுதானே அர்த்தமாகிறது?

  ஆச்சாரியாள்: ரிஷி என்ற சொல் ஞானி என்ற பொருளை மட்டுமே குறிக்கிறது என்று சொல்ல முடியாது. மேலும் நாம் கேள்விப்படும் எல்லா ரிஷிகளும் ஞானியாகவே இருந்தனர் என்றும் கூறமுடியாது. இன்னும் ஒரு கேள்வி அந்த ரிஷிகள் கிரஹஸ்தாச்ரமத்தை மேற்கொள்வதற்கு முன் ஆத்ம ஞானம் பெற்றனரா அல்லது பிரம்மச்சாரியாக இருக்கும்போதே பெற்றனரா? மேலும் எல்லா ரிஷிகளும் கிருஸ்தவர்கள் என்று சொல்வது மிக தவறு. சுகர் ஸ அல்லனகர் போன்றவர்கள் தலைசிறந்த ரிஷிகளென்று அனைவரும் ஒப்புக்கொள்வர். அவர்களெல்லாம் ஞானிகள் என்ற விஷயத்தில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

  சிஷ்யன்: ஒருவன் நைஷ்டிக பிரம்மச்சாரியாக வாழ விரும்புகிறான் என்றால் அதற்கு தகுந்த விரதத்தை எடுத்துக் கொள்வது நல்லதா?

  ஆச்சாரியாள்: ஒருவன் தான் எடுத்த முடிவில் தீவிரமாக இருந்த வைராக்யம் இருந்து, காமம் இல்லாமல் இருந்தால் அம்மாதிரி விரதத்தை எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட விரதம் அவனுக்கு ஒரு பலத்தை கொடுக்கும். ஆனால் இது போன்ற விரதங்களை எடுக்கும் முன்பு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏனென்றால் நைஷ்டிக பிரம்மச்சரிய விரதத்திற்கு பங்கம் ஏற்பட்டால் அது பெரியதொரு பாவமாகும்.

  சிஷ்யன்: பிரம்மச்சாரி ஒருவனது மனதில் தீய எண்ணங்கள் ஏற்பட்டால் அது அவனது பிரம்மச்சாரியத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்று ஆச்சரியாள் கருதுகிறீர்களா?

  ஆச்சாரியாள்: நிச்சயமாக பங்கம் விளைவிக்கும். தன்னையறியாமலேயே ஏதேனும் கெட்ட எண்ணம் ஏற்பட்டால் அது கூட நல்லது அல்ல. அறியாமல் ஏற்பட்ட தீய எண்ணம் பிரம்மச்சரியத்தில் நேரடியாக பங்கம் விளைவிக்கும் என்று கூறமுடியாது. ஆனால் தெரிந்துகொண்டே கெட்ட எண்ணத்திற்கு இடம் கொடுத்தால் அது பிரம்மச்சரியத்திற்கு பங்கம் ஆகும் என்றுதான் கருதவேண்டும். அடுத்ததாக கெட்ட கனவுகள் நேரடியாக பங்கம் விளைவிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒருவன் தன் வசத்தில் இருக்கும்போது ஏதாவது ஒரு கெட்ட எண்ணத்திற்கு இடம் கொடுத்தால் அதற்கு ஒன்றும் சலுகை தர முடியாது.

  சிஷ்யன்: சிலர் யோகத்தை மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் ஆசைகளெல்லாம் முழுதும் அகற்றியவர்களாக இருப்பதில்லை. இம்மாதிரி மக்களும் நைஷ்டிக பிரம்மச்சாரியாக வாழ முடிவு செய்துகொள்ளலாமா?

  ஆச்சாரியாள்: அவர்களுக்கும் மனதில் தீவிர நம்பிக்கையும் இருந்து உபதேசமும் அருளும் பெற்று தீவிரமாக அனுஷ்டானமும் செய்து வந்தால் நைஷ்டிக பிரம்மச்சாரியாக வாழலாம். ஆனால் நைஷ்டிக பிரம்மசாரியாக வாழ்வேன் என்று எடுத்துக் கொள்ளப்பட்ட விரதத்திற்கு பங்கம் ஏற்படுமாயின் அது பெரிய பாவமாகும்.

  சிஷ்யன்: ஒருவன் அவன் ஊர்த்வரேதனாக இருக்க விடாமல் தடுப்பவை எவை?
  (எவனது வீர்யம் அவன் தேகத்தை விட்டு வெளியேறாமல் மேலும் ஆத்யாத்மீக சக்தியாக மாறுமோ அப்படிப்பட்டவனுக்கு ஊர்த்வரேதன் என்று பெயர்)

  ஆச்சாரியாள்: கெட்ட எண்ணம் சொல் கெட்ட செயல் தீயவர்களின் நட்பு திரைப்படம் தீய புத்தகங்கள் முதலிய ஒருவனை ஊர்த்துவரேதனாக இருக்க விடாமல் தடுக்கலாம். ஆகவே இவைகட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டும். உடலில் இருக்கும் அதிக அளவு உஷ்ணமும் ஒருவனை ஊர்த்வரேதனாக இருக்க விடாமல் செய்யலாம். இங்கு சொன்னது போல் உடல் சம்பந்தப்பட்ட காரணமாக இருந்தால் அதிக உஷ்ணத்தை குறைக்க பார்லி வேகவைத்த தண்ணீரை சாப்பிட்டு வரலாம். சில உடற்பயிற்சிகளும் எப்போதும் தேவை. கனவுகளில் கெட்ட எண்ணம் தோன்றினால் அது ஒருவனது மனதின் கெட்ட எண்ணத்தைக் குறிக்கும். விழிப்பு நிலையிலேயே கெட்ட எண்ணங்கள் வருமானால் அது மிகவும் தீயது என்று தெரிந்து கொள்ளலாம். ஒருவன் தனது வைராக்கியத்தை தீவிரப்படுத்திக் கொள்ள விருப்பம் உடையவனாக இருந்தால் எனக்கு பிரம்மச்சரியம் மிகவும் அவசியம் இவ்வுலகில் இருக்கும் எப்பொருளில் இருந்தும் எனக்கு இன்பம் கிடைக்காது என்பதை மனதில் பசுமரத்து ஆணி போல பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவிற்கும் நம் மனநிலையை மாற்றும் சக்தி உண்டு. பிரம்மச்சரியத்தில் சிரத்தை உள்ளவர்கள், அவர்கள் உட்கொள்ளக் கூடாது என்று தடுக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்த்து விடவேண்டும். வெங்காயம் பூண்டு மிகவும் உப்பான பண்டம். காரம் மாமிசம் மது காப்பி டீ போன்றவைகளைக் விட்டுவிடுவதே நல்லது. சர்வாங்க ஆசனம் போன்ற ஆசனங்கள் ஊர்த்வரேதனாக இருக்க விரும்பும் பிரம்மச்சாரிக்கு தகுந்த பலன் அளிக்கும்.

  சிஷ்யன்: ஒருவன் ஊர்த்வரேதனவதால் ஏதேனும் பிரயோஜனம் உண்டா?

  ஆச்சாரியாள்: எப்போது ஒருவன் ஊர்த்வரேதனாவானோ அப்போது அவனுக்கு நன்கு தியானம் வரும். ஆன்மிக வாழ்வில் வேகமாக முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.

  சிஷ்யன்: வைராக்கியத்துடனிருந்து காமம் இல்லாதவர்களாகவும் இருந்து எவர்கள் நைஷ்டிக பிரம்மச்சாரியத்தைக் கடைபிடிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஆச்சாரியாள் ஆசிகள் உண்டா?

  ஆச்சாரியாள்: அப்படிப்பட்டவர்களுக்கு எனது ஆசிகள் எப்போதுமே உண்டு. அவர்கள்போல் பலரும் இருந்தால் நல்லது என்பது என் கருத்து.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »