செவ்வாய், நாக தோஷ பரிகாரங்கள்!

ஆலோசனைகள் கட்டுரைகள் ஜோதிடம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

09 June05 tiruchendur beach - 2026

நாக தோஷ பரிகாரம்: ராகு அல்லது கேது லக்ன த்திற்கு 1,2,4,5,7, 8, 12ல் நிற்க நாக தோஷம் ஏற்படும்.

இதற்கு பரிகாரமாக ஐம்பொன் அல்லது வெள்ளி அல்லது செம்பில் நாகம் ஒன்று வாங்கி 21 நாள் கற்பூரம், பத்தி, சாம்பிராணியுடன் பூஜை செய்து கடலில் போட்டு குளித்து வர நாக தோஷம் விலகும். இது எளிய பரிகாரம் ஆகும்.

குழந்தைகளுக்காக, தாயும் தந்தையுமாக திருச்செந்தூர் சென்று பரிகார பூஜை செய்து கொள்ளலாம்.

குடும்பத்துடன் சென்று தேங்காய், பழம் , பூமாலை சாற்றி அவரவர் வசதிக்கு தகுந்தவாறு பரிகார பூஜை செய்து வருவது உத்தமம்.

செவ்வாய் தோஷ பரிகாரம் :- செவ்வாய் லக்னத்திற்கு, சந்திரனுக்கு, சுக்கிரனுக்கு 2,4,7,8,12ல் நிற்க செவ்வாய் தோஷம் ஏற்படும். இந்த வீடுகளில் செவ்வாய் நின்ற வீட்டின் அதிபதி 6,8,12ல் நின்றால் மட்டுமே செவ்வாய் தோஷம் ஆகும்.

இதற்கு பரிகாரமாக வசதிக்கு தகுந்தவாறு ஐம்பொன் அல்லது வெள்ளி அல்லது செம்பில் சிறிய வேல் ஒன்று வாங்கி 21 நாள் வீட்டில் பூஜை செய்து திருச்செந்தூர் சென்று நட்சத்திரம் சொல்லி வேலை கொடுத்து அர்ச்சனை செய்து வாங்கி கடலில் கொண்டு போய் போட்டுவிட்டு கடலாடி வர தோஷம் விலகும்!

– பரிகார ஜோதிடர் S. காளிராஜன்
ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம் இலத்தூர்,
நெல்லை மாவட்டம்- 627803
தொடர்பு எண்: 9843710327

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.