ராஜ யோகங்களில்… தர்ம கர்மாதிபதி யோகம்..!

Published:

Navagraha astro 1 - 2026

ராஜ யோகங்களில் தர்ம கர்மாதிபதி யோகம் : இந்த யோகம் செல்வம் – செல்வாக்கு – அந்தஸ்து – கெளர்வம் – சுகமான வாழ்க்கை அமைப்பு – தெய்வ காரியங்கள் – ஆலயச் சேவை – திருப்பணிகள் செய்தல் -அதிகார கௌரவ பதவிகள் அடைதல் என்ற உயர்வான நிலைகளை அளிக்கும்.

ஒரு விசேஷமான பலனையும் இந்த யோகம் செய்யும். அதுதான் கர்ம புத்திர வாய்ப்பு எனும் சந்ததி வளர்ச்சிக்கான புத்திர பாக்கியம் – ஆண் வாரிசு ஏற்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகிறது.

அதாவது 9ம் இடம் தர்ம ஸ்தானம் பாக்கிய ஸ்தானமாகும். 10ஆம் இடம் தொழில் ஸ்தானம் மற்றும் கர்மம் என்னும் பித்ரு தர்ப்பணம் பற்றி குறிப்பிடும்.

ஆக தர்மம்+ கர்மம் ஆகிய இரண்டும் இணைந்தால் புத்திர தோஷம் இருந்தாலும் நீங்கி புத்திரப் பேறு கிடைக்கும்.

கர்மம் செய்ய ஆண் வாரிசு கிடைக்கும். 9க்கு உடையவனும் 10க்கு உடையவனும் இணைந்தாலோ, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ இந்த யோகம் உண்டு.

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

இவர்கள் அதாவது 9, 10க்கு உடையவர்கள் 6,8,12ல் மறைந்தாலோ அல்லது ராகு, கேது சம்பந்தப்பட்டாலோ யோக பலம் குறைவு.

இந்த யோகம் உள்ளவர்கள் ஊரைக் கட்டி ஆள்வார்கள் (நாட்டாண்மை) குடும்பத்தை செம்மையாக நடத்துவர். நிர்வாகிக்கும் தகுதியை பெறுவர்.

– பரிகார ஜோதிடர் S.காளிராஜன்,

ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம்,
கீழத்தெரு இலத்தூர் – நெல்லை மாவட்டம் 627803
9843710327

Related articles

Recent articles

spot_img