தொடர் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்பு 253; இலங்கை அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

உலகம் சற்றுமுன்

srilanka blast1 - 2026

வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு, 253 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கையில் சரியான தகவல்கள் பெறப்படவில்லை என்று கூறி, 253 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறியுள்ளது அரசு.

இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரி அனில் ஜாங்சே வெளியிட்டுள்ள அறிக்கையில்…  உயிரிழந்தோரின் சடலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் துல்லியமாக கணக்கிட முடியவில்லை.

தற்போது உண்மையான நிலவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி அடுத்தடுத்து பல இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் மொத்தம் 253 பேர் உயிரிழந்துள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.- என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே 359 பேர் உயிரிழந்ததாகக் கூறிய நிலையில் தற்போது 253 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.