பேஸ்புக்… நாலு வகைப்படும் நல் மேய்ப்பர்கள்…!

அடடே... அப்படியா? இலக்கியம் உங்களோடு ஒரு வார்த்தை உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்

facebook under watch - 2026
சுக பிரம்மத்தைப் போல் கதை சொன்னவர்கள் இல்லை.
பரீட்சித்தைப் போல் கதை கேட்டவர்கள் இல்லை.
…போல் பேஸ்புக்கில் மாய்ந்து மாய்ந்து கருத்திடுபவர்கள் இல்லை
…போல் பேஸ்புக்கில் மேய்ந்து நேரம் போக்குபவரும் இல்லை!
பேஸ்புக் மேய்வாளர்கள் 4 வகைப் படுவார்கள்.

facebook reactions - 2026முதலாமவர், தண்ணீரில் எண்ணை கலந்தாற்போல் இருப்பவர்கள். எண்ணை நீரில் விரவி எல்லா இடத்திலும் பரவுவது போல் அவர்கள் மற்றவரிடத்தும், தாம் படித்த நல்ல விஷயங்களை ஷேர் செய்து, கமெண்ட் போட்டு, லைக்கிட்டு சமூக ஆரோக்கியமான விஷயங்களில் பங்கு பெறுவார்கள்.

இரண்டாமவர், தண்ணீரில் விழும் நெய் விழுதினைப் போன்றவர்கள். நெய் ஒரே இடத்தில் சேர்வது போல், ஒரே விதமான சிந்தனையில் கருத்தைப் படித்துவிட்டு, வெறுமனே லைக்கிட்டு, மற்றவருக்கு கருத்து சென்று சேர வேண்டுமே என்ற சமூகப் ப்ரக்ஞை கிஞ்சித்தும் இன்றி, ஷேர் எதுவும் செய்யாமல் இருப்பார்கள். இவர்களுக்கு மட்டுமே இவற்றால் பயன் கிடைக்கும். மற்றவர்களுக்கு எந்த பயனும் இராது.

மூன்றாமவர், விரித்து வைத்த ஜமுக்காளத்தைப் போன்றவர்கள். மேய்வார்கள், படிப்பார்கள், ஆனால் எதுவும் செய்ய மாட்டார்கள். கதை முடிந்ததும் எடுத்து உதறி, ஜமுக்காளத்தை அப்படியே மடித்து வைப்பதைப் போன்றவர்கள். இவர்களால் இவருக்கேகூட எந்தப் பயனும் கிடையாது.

நான்காமவர் களிமண் வகையறா. எதுவும் செய்ய மாட்டார்கள். எதற்கு என்று தன் இருப்பைக் கூட காட்டாதவர்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.