பக்தர்களுக்காக…. தூய்மைப் படுத்தும் பூஜைகள் முடிந்து சபரிமலை நடை மீண்டும் திறப்பு!

Published:

sabarimala sannidhi closed tilljan12 - 2026

சபரிமலை நடை மீண்டும் திறக்கப் பட்டது. ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்று எங்கிருந்தெல்லாமோ வந்த பக்தர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, புண்யாகவசனம் மற்றும் சுத்தி பூஜைகள் மேற்கொண்டு, மீண்டும் சபரிமலை நடையைத் திறக்க முடிவு செய்யப் பட்டது.

அதன்படி, சபரிமலை நடை அடைக்கப்பட்டு, ஒரு மணிநேரம் சுத்தி பூஜைகள் மேற்கொள்ளப் பட்டன. அதன் பின்னர் மீண்டும் நடை திறக்கப் பட்டது.

50 நாட்கள் விரதமிருந்து பல கி.மீ., தொலைவு கடந்து நடந்து வந்த தங்களுக்கு ஐயப்பன் தரிசனம் கிட்டாமல் போகிறதே என்று கதறி அழுத பக்தர்களின் நலனைக் கருதி உடனே சுத்தி பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு நடை திறக்கப் பட்டது.

Related articles

Recent articles

spot_img