கூட்டணிப் பேச்சு தொங்கிப் போச்சு! பியூஸ் ஆன பியூஷ் கோயல் தமிழக வருகை!

Published:

piyush goel pon radhakrishnan - 2026
File Copy

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் தமிழக வருகை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக., அதிமுக., கூட்டணியில் மெகா கூட்டணி உருவாக்கப்படும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கப்படும் என்றும் கூறப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி பாஜக., நிர்வாகிகளிடையே பேசியபோது, பழைய நண்பர்களுடன் கூட்டணி வைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதனால் பாமக., தேமுதிக., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப் படும் என்று கூறப்பட்டது. ஆனால் தேமுதிக., தலைவர் ஊரில் இல்லை. பாமக., அதிமுக., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், அதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகத்துக்கு வருகை தர இருப்பதாகக் கூறப்பட்டது.

இதனிடையே, அதிமுக.,வில் உள்கட்சிக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தம்பிதுரை, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் தங்கள் போக்கில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் குழப்பான நிலை ஏற்பட்டது. இது ஸ்லீப்பர்செல்களின் வேலை என்று பாஜக., கூறியது.

இந்நிலையில், பியூஷ் கோயலின் தமிழக வருகை திடீரென ஒத்திப் போடப் பட்டுள்ளது. இதற்கு, அருண் ஜேட்லி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதைத் தொடர்ந்து பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்புகள் பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளதால், அவரது வெளியூர்ப் பயணங்கள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

புதிய பொறுப்புகளின் காரணமாக பியூ​ஷ் கோயலின் தமிழக வருகை 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது!

Related articles

Recent articles

spot_img