தமிழகத்தை நாசமாக்கும் திராவிடக் ‘கருப்பு’!

அடடே... அப்படியா? புகார் பெட்டி மதுரை
black tn - 2026

மதுரை : மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பேருந்து நிலையத்தில் மதிமுக, த.பெ.தி.க., பெரியாரிய இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை அடுத்து மதுரை பேருந்து நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருவது ஒரு முக்கியமான மருத்துவ மனையின் திறப்பு விழாவிற்காக. அது அரசியல் நிகழ்ச்சி அல்ல. அவருக்குக் கருப்புக் கொடி காட்டுவது எந்தவிதத்திலும் நியாயமாகாது. முழுக்க முழுக்க நாடகத்தனமானது. கோமாளித்தனமானது.

திராவிடச் சண்டியர்களும், அவர்களால் ஆதாயம் பார்க்கும் கும்பல்களும் கருப்புக் கொடி காட்டுவோம் என்று கூச்சல் போடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இவர்கள் கோமாளிகளாக நடந்து கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சரியம். 

கொஞ்சம் அறிவுள்ள அரசியல் நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் எதிர்க் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். மருத்துவமனையால் பயன்பெறப் போகின்றவர்கள் தமிழ் மக்கள்.

திராவிட ‘இனமான’ வரலாற்றுக் குப்பைகள் திரட்டப்படும்போது இதுவும் சேர்த்துக் கொள்ளப்படும் என்பதைத் தவிர இதனால் எந்தப் பலனும் விளையப் போவதில்லை. ஓரத்தில் நின்று கொடி காட்டிவிட்டு வீட்டிற்குச் செல்ல வேண்டியதுதான் – என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

திராவிடம் எனும் பெயரில் தமிழர்களை மூடர்களாக மாற்றி வைத்திருப்பதைத் தவிர வேறு எதுவும் இவர்கள் செய்யவில்லை என்கிறார்கள் தமிழக அரசியலின் அரை நூற்றாண்டைக் கண்டவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.