amit sha - 2026

2019 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு திரும்பிவந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி அவரை வரவேற்காது ஏற்றுக்கொள்ளாது அவருக்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டன என்று கூறியிருக்கிறார் அமித் ஷா.

விஜயநகரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா கட்சித் தொண்டர்களிடம் இவ்வாறு கூறினார்… சந்திரபாபு நாயுடுவை யு டர்ன் முதல்வர் என்று கூறப்படுவதை சுட்டிக்காட்டிய அமித்ஷா தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வாழ்க்கையை விரிவாக எடுத்துரைத்தார்

நாயுடு காங்கிரஸ் கட்சி அரசில் இருக்கும்போது அரசியலுக்கு வந்தார் ஆனால் காங்கிரஸ் தோல்வி அடைந்ததும் அவர் என்டி ராமராவ்வின் தெலுங்கு தேசம் கட்சிக்குள் நுழைந்தார்! ஆனால் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தபோது என்டிஆரின் முதுகில் குத்திய சந்திரபாபு நாயுடு கட்சியையும், அனைத்தையும் திருடிக்கொண்டார்

அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு சேர்ந்தார் ஆனால் மிக விரைவிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு அவர் வெளியேறினார் அது 2004ஆம் வருடம்.

அதன் பிறகு பத்து வருடங்கள் சந்திரபாபு நாயுடு மிகப்பெரிய அரசியல் அமைப்புடன் இருந்தார் ஆனால் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவார் என்ற சூழல் நிலவிய போது அதை அப்படியே விட்டுவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாவினார்

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

தெலங்கானா தேர்தலுக்கு சற்று நாட்களுக்கு முன்னதாக அவர் பதவியை உதறிவிட்டு காங்கிரஸுடன் கைகோர்த்தார் இது தெலுங்கு தேச மக்களை மிகவும் ஏமாற்றிய புண்படுத்திய நடவடிக்கைகள்தான்

ஆனால் நாயுடு காங்கிரஸுடன் இணைந்து தெலங்கானா தேர்தலில் தோல்வி அடைந்த உடன் காங்கிரஸ் உடனான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்

பிறகு மகா மெகா கூட்டணியில் இணைய தொடங்கினார். தொடர்ந்து தேர்தல் குறித்த தகவல்கள் வரும் பொழுது மீண்டும் அவர் யூ-டர்ன் அடித்து பாஜகவின் கட்டுக்குள் உள்ள தேச கூட்டணிக்கு வருவார்

ஆனால் இந்த முறை தேர்தல் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு காண அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டன அவர் திருப்பி அனுப்பப்படுவார் என்று அமித் ஷா தொண்டர்கள் மத்தியில் பேசினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending