எவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதிரியே அடிவாங்குறது..?! அவ்வ்வ்..!

Published:

11 June23 Mamtha - 2026

குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத கதையாக… உச்ச நீதிமன்றத்தால் பயங்கரமாக குட்டுப் பட்டும் மம்தா பானர்ஜி, ஏதோ தனக்குத்தான் வெற்றி என்பது போல் ஊடகங்களில் வாய் திறந்து வருகிறார். மாநில அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் கூட, ஏதோ தனக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் கூறிள்ளது போல் மம்தா கூறியுள்ளது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

அதேநேரம், பாஜக.,வும் தங்கள் தரப்புக்குக் கிடைத்த வெற்றி இது என்று உச்ச நீதிமன்ற உத்தரவைக் குறித்து கூறியுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம், மேற்கு வங்க விவகாரத்தில் கூறியது என்ன என்பதைப் பார்த்தால், மம்தா எவ்வளவு தூரம் பொய் சொல்கிறார் என்பதும் தெரியவரும்!

நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கும் விசாரணைக்கு மேற்கு வங்க காவல் ஆணையரும் அரசும் கட்டுப்பட வேண்டும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும், சிபிஐ..க்கு காவல் ஆணையரும் மாநில அரசும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், ஒரு விசாரணை என்ற அளவில், காவல் ஆணையர் பதில் அளிப்பதில் அவருக்க்கு அப்படி என்ன சிரமம் உள்ளது என்றும் கேட்டுள்ள நீதிமன்றம், ஆணையர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கட்ந்த 3ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்புகிறோம் என்று நீதிபதி கூறியுள்ளார். அதாவது, ஊழல் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அமைத்த சிபிஐ.,யின் விசாரணைக் குழுவை கைது செய்வது, உச்ச நீதிமன்றத்தையே கைது செய்து காவலில் வைப்பதாகும் என்பதை நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

மேற்கு வங்கம் குறித்த விவகாரத்தில், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, ஏற்கெனவே சிபிஐ விசாரணைக்கு தங்கள் அனுமதி இன்றி எவரும் வரக்கூடாது என்று மம்தா பானர்ஜி தடை விதித்தார். அப்போதே, தனக்கும் ஊழலில் பங்கு உண்டு என்பதையும், தன்னை விசாரிக்க சிபிஐ வந்துவிடக் கூடாது என்ற உந்துதலில் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை மம்தா பானர்ஜி மேற்கொண்டார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி நடக்கின்ற விசாரணையைத் தடை செய்து அதிகாரிகளைக் கைது செய்த மேற்கு வங்க போலீஸின் செயலுக்கு, தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தற்போது காவல் ஆணையர் கைது செய்யப் படக் கூடிய அளவுக்கு குற்றம் புரிந்ததாக உறுதியாக நிலையில், ஆணையரைக் கைது செய்யக் கூடாது என்றும், விசாரணை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மட்டுமே கணக்கில் கொண்டு, நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், சிபிஐ., ஏற்கெனவே விசாரிப்பதற்கான நோட்டீஸைத்தான் காவல் ஆணையருக்கு அனுப்பியது. 3 முறை அனுப்பப் பட்ட நோட்டீஸுக்கும் ஆணையர் பதில் தராததாலும், ஆஜராகாததாலும், அவர் தலைமறைவானதாக சிபிஐ., அறிவித்தது. தலைமறைவு என்றால், அவரைக் கைது செய்ய சிபிஐ.,க்கு அதிகாரம் உள்ளது என்பதால், காவல் ஆணையர் கைதாகக் கூடும் என்று முன்னெச்சரிக்கை உணர்வுடன் மம்தா பானர்ஜி, இத்தகைய ஆர்ப்பாட்டங்களை எல்லாம் செய்துள்ளார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேலும், சிபிஐ., அதிகாரிகளை மேற்கு வங்க போலீஸார் கைது செய்ததாலும், சிபிஐ அலுவலகத்துக்கு காவல் இருந்த போலீஸாரை மாநில அரசு வாபஸ் பெற்றதாலும், அங்கே மத்திய ரிசர்வ் போலீஸார் காவலுக்கு அனுப்பப் பட வேண்டியதாற்று. எனவே, காவல் அதிகாரியை விசாரிக்க, சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவில் இருந்தால் அது பிரச்னைக்கு உள்ளாகலாம் என்று கருதியுள்ளது. எனவே, இருதரப்புக்கும் வசதியாக, மேகாலயா மாநிலம் ஷில்லாங் சென்று சிபிஐ முன்பு ஆணையர் ஆஜராகலாம் என்றும், அங்கேயே வைத்து விசாரணையை மேற்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில்தான் இப்போது மம்தாவுக்கு அடிவயிறு கலங்கியிருக்கிறது. எது நடக்கக்கூடாது என்று இத்தனை நாள் போராடினோமோ அது இப்போது நடந்துவிட்டது என்பதுதான்! ஏனெனில், காவல் ஆணையர் விசாரிக்கப் படக் கூடிய நிலையில், தனது ஊழல் தவறுகள் வெளிச்சத்துக்கு வரக்கூடும் என்று அஞ்சுவதுதான்.

ஆனால், ஏற்கனவே காவல் ஆணையர் பல ஆதாரங்களை அழித்துவிட்டார் என்று சிபிஐ கூறியிருப்பது, மம்தாவுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்தான்!

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

எனவே தான் விஷயத்தை திசை திருப்ப, ஆணையரை கைது செய்யக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை. அதை நீதிமன்றம் கூறிவிட்டது என்று கூறியுள்ளார். ஆனால், இது எங்களுக்கே வெற்றி என்கிறார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்! சிபிஐ விசாரணையில் மம்தா குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். சட்டத்தை மீறுகிறார். “சிபிஐ முன்பு ஆணையர் ஆஜராக வேண்டும் என்பதும், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீசும் மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றி! நீதிமன்றத்தின் உத்தரவு சிபிஐ.,க்கு சாதகமாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.

இருப்பினும், இப்போது மம்தா, வடிவேலு காமெடியாக, எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே காட்டிக் கொண்டிருப்பது என்ற நிலையிலேயே உள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img