மோடி பயம்… பிடித்தாட்டுது பாகிஸ்தானை! திடீர் புத்தர்களான பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

அடடே... அப்படியா? உலகம்

pakistan imran khan parli - 2026

அமைதி நடவடிக்கையாக, இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவிடம் நாளை ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இதனை அமைதி விரும்பிகள் போல் திடீர் புத்தர்களாகிவிட்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

இப்போது இந்த அறிவிப்பை இந்தியாவில் இருப்பவர்களைக் காட்டிலும் பாகிஸ்தானில் இருப்பவர்கள் அதிகம் வரவேற்றுள்ளனர். தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் தாங்கள் ஓர் அமைதி விரும்பி என்று காட்டுவதற்குக் கிடைத்த வாய்ப்பு இது என்று வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இன்னமும் அப்பாவியான குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் என்ன நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது, மிகச் சில இந்தியர்களுக்கே புரிபடும். காரணம் அவர்கள் பாகிஸ்தான் மண்ணைக் காதலிப்பவர்கள் இல்லை! இந்திய மண்ணை சுவாசிப்பவர்கள்!

சர்வதேச நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட போதும், பாகிஸ்தான் இன்னமும் சித்ரவதைக் கூடாரத்தில் வைத்திருக்கிறது குல்பூஷனை!

அப்படி இருக்க ஏன் அபிநந்தனை மட்டும் இப்படி விடுவித்திருக்கிறது?! பாகிஸ்தானின் திடீர் அமைதி விரும்பி புத்த வேஷம் ஏன்?

காரணம், இந்த முறை விவகாரமும் எதிர்வினையும் இந்திய ராணுவத்தின் கைகளில் நேரடியாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. தன் ராணுவ வீரனுக்கு ஏதும் பிரச்னை என்றால், ராணுவம் நேரடியாகக் களத்தில் இறங்க முடியும்! அதற்கான கட்டுகளை அவிழ்த்திருக்கிறார் பிரதமர் மோடி!

மேலும், மோடியின் உறுதியான நடவடிக்கைகளையும், உலக நாடுகளை கேட்டுக் கொண்டதில் அவற்றின் நெருக்குதல் நடவடிக்கைகளையும் பாகிஸ்தானால் தற்போதைய சூழலில் தாங்க இயலாதுதான்! இந்த நிலையில், அமைதி வேஷம் போடாவிட்டால், பாகிஸ்தானே போருக்குப் பின்னான அமைதியில் ஆழ்ந்துவிடும் என்பது பாகிஸ்தானின் முரட்டு காட்டுமிராண்டி முஷாரப் கொடுத்துள்ள எச்சரிக்கை மணி.

இந்த நிலையில்தான், இம்ரான் கானின் அறிவிப்புக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதன் மூலம், இப்போது இந்தியாவுடன் போரில் ஈடுபட்டால் நாம் என்ன கதிக்கு ஆளாவோம் என்பதை பாகிஸ்தான் உறுப்பினர்கள் நன்கு உணர்ந்துள்ளது தெரிகிறது.

1 thought on “மோடி பயம்… பிடித்தாட்டுது பாகிஸ்தானை! திடீர் புத்தர்களான பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.