ஆற்காடு அருகே ஆழ்துளைக் கிணறில் விழுந்த குழந்தை: மீட்புப் பணி தீவிரம்

ஆழ்குழாய்க்கான விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதால், அடுத்தடுத்து கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் நடக்கும் ஆழ்துளை கிணறு பிரச்னை. ஆற்காடு அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் 2 ½ வயது குழந்தை தவறி விழுந்தது. மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆற்காடு அடுத்த சாம்பவ சிவபுரம் பகுதியை சேர்ந்தவர் குட்டி, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களது மகன் தமிழரசன் (வயது2½) தமிழரசனின் தாத்தா கனகசபை வீடு கூராம்பாடி பகுதியில் உள்ளது. குழந்தை தமிழரசன் தனது அம்மா கீதாவுடன் இன்று காலை தனது தாத்தா வீட்டிற்கு சென்றான். இன்று காலை 8.30 மணிளவில் வீட்டு முன்பு தமிழரசன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள விளை நிலங்களுக்கு முன்பு மூடப்படாமல் வைத்திருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து விட்டான். விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்று தாய் கீதா மற்றும் பாட்டி தேடிப் பார்த்தனர். அப்போது அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் வந்தது. இதனால் பதறியடித்து கொண்டு அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் மற்றும் பாட்டி அழுது புரண்டனர். இதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். இதுகுறித்து ஆற்காடு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 400 அடி ஆழ்துளை கிணற்றில் குழந்தை 40 அடி ஆழத்தில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அருகில் குழி தோண்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தை சுற்றிலும் மண் பகுதியே உள்ளதால் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் வேகமாக பள்ளம் தோண்டி வருகின்றனர். இதுவரை 20 அடி ஆழம் தோண்டி உள்ளனர். மூச்சு திணறல் ஏற்பாடாமல் இருக்க குழந்தைக்கு ஆக்சிஜன் செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ குழுவினரும் ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் உள்ளது. இதுபற்றி சம்பவம் அறிந்ததும் கலெக்டர் நந்தகோபால், எஸ்.பி. செந்தில்குமாரி மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அவர்கள் மீட்பு பணியை துரிதப்படுத்தி வருகின்றனர். குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கி 4 மணி நேரம் ஆகியுள்ளது. குழந்தையிடம் இருந்து எந்த விதமான சத்தமும் வரவில்லை. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதே போல கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். சங்கரன்கோவிலை அடுத்த குத்தாலப்பேரியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மூன்றரை வயது குழந்தை ஹர்ஷன், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் காலை 10.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தந்தையுடன் தோட்டத்திற்குச் சென்றிருந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், மீட்புப் பணியைத் தொடங்கினர். 15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதை அறிந்ததும், அருகில் குழி தோண்டி குழந்தையை மீட்கும் பணி தொடங்கி12-04-15 TamilNadu Bore Well News photo 02 நவீன கருவிகளின் உதவியுடன் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொண்டனர். இடையில் மழையால் மீட்பு பணி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியில் நவீன கருவியின் உதவியுடன் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இதே போல தான் கடந்த வருடம் ஆகஸ்ட் 11 ம் தேதி கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு வாரம் தாண்டி சடலமாக அச்சிறுவனின் சடலம் ஒரு வாரத்திற்கு பிறகு  மீட்கப்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறுக்கான விதிமுறைகள்12-04-15 TamilNadu Bore Well News photo 01 ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், ஆழ்துளை கிணறுகள் அமைப்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த, கடந்த 2009-ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவு குறித்த விவரங்கள்… ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதற்கு முன்னர், குறைந்தது 15 நாட்களுக்கு முன்பாக உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும் இடத்தில் விளம்பரப் பலகைகளை கண்டிப்பாக நிறுவ வேண்டும். பலகையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனத்தின் முழுமையான முகவரி, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் இடத்தின் உரிமையாளரின் முகவரி மற்றும், புனரமைக்கும் நிறுவனத்தின் முகவரி ஆகிய விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.