தமிழ் ‘நாடு’க்கான தனித் தேர்தல் அறிக்கை! வெளியிடுகிறார் ராகுல்!

அடடே... அப்படியா? நகைச்சுவை

onrekalpakkanaledu copy - 2026

தமிழ்நாடுக்கு என தனி தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தயாரித்துள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாடாளுமன்றத்துக்கு என தனி தேர்தல் அறிக்கையை இன்று இரவு வெளியிடுகிறார் இந்திய இந்திரா காங்கிரஸ் தலைவர் ராகுல்.

இந்தத் தேர்தல் அறிக்கை குறித்து ரகசியத் தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, தமிழகத்திற்கு காஷ்மீர் மாநிலத்தைப் போல் தனி அந்தஸ்து கொடுப்போம் என்று அறிவிக்கப் படுமெனத் தெரிகிறது.

மேலும்,  அனைத்து வரிகளும் ரத்து; நீட் தேர்வு இல்லாமலே அனைவருக்கும்‌ டாக்டர்‌ பட்டம் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று கூறப் படுகிறது.

மேலும் சில அம்சங்கள்….

துரைமுருகனிடம் கைப்பற்றப்பட்ட 33 கோடிகளை வட்டி+ மானநஷ்ட ஈடுடன்‌ திருப்பிக்கொடுப்போம்!

தமிழ் ஈழம்‌ இந்தியாவுடன் இணைக்கப்படும்; வைகோ ஈழத்து அதிபராக்கப்படுவார்!

நயன்தாராவுக்கு கோலமாவு கோகிலா படத்திற்காக ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப் படும்!

கருணாநிதிக்கு 1330 அடியில்‌ சிலை வைக்க படும் ! திருக்குவளை புனித தலமாக அறிவிக்கப்படும்!

கனிமொழி மேல் உள்ள வழக்குகள் திரும்ப பெறப்படும்; கனிமொழிக்கு ராணுவ அமைச்சர் பதவி வழங்கப் படும், அவர் ஆற்றிய சேவைகளுக்கு பாரத ரத்னா வழங்கப்படும்!

அய்யாக்கண்ணுவுக்கு தனி‌ மைதானம் தில்லியில் அமைக்கப் படும்!

ஸ்டாலின் வழி நடத்துதல் பேரில் மைய அரசு செயல்படும்! என்று தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!

– கற்பனை வடிவம் : குமார் கந்தசாமி  Kumar Kandasamy

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.