நீட்ட்ட்டாஆஆஆ ஒரு பேட்டீ… நீட் போட்டி குறித்த பேட்டி!

TV Interviews - 2026

இது நீட் போட்டி தேர்வு குறித்த பேட்டி…!

ஹலோ எங்கிருந்து பேசறீங்க ?

கீரிப்பட்டிங்க..

கீரிப்பட்டியா? கொஞ்சம் டி வி சவுண்டு குறைச்சுக்கோங்க!!

சொல்லுங்க.. உங்க ஊர்ல எவ்வளவு பேரு நீட் தேர்வு எழுதினாங்க?.

அஞ்சு பேரு எழுதினோம். நாங்க அரசினர் பெண்கள் பள்ளி. பக்கத்தில திண்டுக்கல்லில் செண்டர் போட்டிருந்தாங்க. எல்லா ஏற்பாடும் ரொம்ப நல்லா செஞ்சிருந்தாங்கய்யா. பாதுகாப்பா இருந்திச்சு.. தேர்வு கூட எளிமையா இருந்துச்சுங்கய்யா..

கட்….

ஹலோ, யோவ் செல்வராஜூ, என்னய்யா பேட்டி எடுக்கற? எல்லாம் சிறப்பா இருந்துச்சாம்..! பாதுகாப்பா உணர்ந்தாங்களாம்!! மாசா மாசம் சம்பளம் வாங்கற இல்ல.. என்ன ……த்துக்கு வேலை பாக்கற? என் வேலைக்கு சேர்த்து உலை வச்சுருவ போல இருக்கே!

சாரி ஸார், லைவ் ப்ரொக்ராம்ன்னு முயற்சி பண்ணினேன் ஸார்!

ஒழுங்கா கொஞ்சம் தர்ம நியாயத்தோட வேலை பாருங்கய்யா. ஆப்பு அடிச்சுருவாங்க, ஞாபகம் வச்சுக்க..

சரிங்க ஸார்..

ஹலோ.!

வாடிபட்டியிலிருந்து அருணா பேசறேங்க.. என் கூட கனகா, கயல்விழி, மணிமேகலை, லெச்சுமி இருக்காங்க, எங்க பள்ளி ஆசிரியர் சிவநாதன் சாரும் இருக்காங்க..

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வு எழுத முடிஞ்சுதா?
ஆமாம் ஸார். மதுரைக்கு போய் எழுதினோம்ங்க.

என்னம்மா இது நாலு பேர் இருக்கீங்க, வாடிபட்டியில செண்டர் இல்லையா?

நாங்களாத்தாங்க விரும்பி மதுரை செண்டர் கேட்டு வாங்கிக்கிட்டோம்.

இங்கிருந்து பஸ்ஸுக்கே ஏகப்பட்டது செலவு ஆயிருக்குமே?
இல்லீங்க, அரசாங்கம் கொடுத்த இலவச பஸ் பாஸ் இருக்குதுங்க..

பயிற்சி எடுக்கறதுக்கே ஆயிரக்கணக்கில் செலவு ஆயிருக்குமே?

இல்லீங்கய்யா, எங்க பள்ளியிலே நல்ல முறையிலே கோச்சிங் கொடுத்தாங்க, சிவநாதன் ஸார் தான் எங்களை பாதுகாப்பா கூட்டிகிட்டு போயி வந்தாரு.

வெயில்ல செண்டர்ல ஒதுங்க கூட இடம் இருந்திருக்காதே? எப்படிம்மா சமாளிச்சீங்க?

நிழல்ல நல்ல காத்தோட்டமான அறையில தான் உட்கார வச்சாங்க. குடி தண்ணீர் வசதியில்லாம் கூட நல்லா இருந்துச்சுங்க.

காதில தோடு, கம்மல் போன்ற நகைகளையெல்லாம் கழட்டி கொடுன்னு மிரட்டி வாங்கியிருப்பாங்களே?

எங்ககிட்ட பெரிசா அப்படி ஏதுமில்லை ஸார்.மேகலை மட்டும் தான் ஒரு செயின் போட்டிருந்தா. அதையும் ஸ்கேன் பண்ணி உள்ள அனுமதிச்சிட்டாங்க. செல்போனுக்கு அனுமதியில்லைன்னு முன்னமே சொல்லியிருந்தாங்க, அதனாலே எடுத்துக்கிட்டு போகலை.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

தேர்வு இந்த முறை ரொம்ப கஷ்டமா இருந்திச்சா?

ஓரளவு எளிதாகத்தான் இருந்திச்சுங்க. ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் எல்லா மொழியிலும் கேள்விகள் இருந்திச்சு. நாங்க தமிழ் மொழியில் தேர்வு செய்து எல்லாமே சிறப்பாக எழுதிட்டு வந்துட்டோம்.

கட் ….

தமிழகத்தில் இந்த முறை நீட் தேர்வுக்கு சென்ற மாணவிகள் ஆற்றொண்ணா சோதனைகளுக்கு உட்படுத்த பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலிருந்து மாணவிகளுக்கு துணையாக ஒரு ஆண் ஆசிரியர் அனுப்பப்பட்டிருக்கிறார். கடைசி நேரத்தில் தேர்வுக்கு தயாராகும் மாணவிகளின் மனதில் இது ஒரு சபலத்தை ஏற்படுத்தி இது அவர்களின் தேர்வின் முடிவினை பாதிக்காதா, ஒரு பெண் ஆசிரியை அனுப்பினால் என்ன என்ன சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள். சங்கிலி அணிந்து வந்த மாணவிகள் தனிப்பட்ட முறையில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். கேள்வித்தாள்களில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் இருந்தாலும் முதலில் ஹிந்தி மொழியே கண்ணில் பட்டதால் அதை கண்டு சில நிமிடங்கள் நிலை குலைந்து போனதாக ஒரு மாணவி கருத்து தெரிவித்திருக்கின்றார். இது போன்ற அறிமுகமே இல்லாத மாற்று மொழிகள் தேர்வுத்தாளில் முதலில் கண்ணில் பட்டால் அது மாணவ, மாணவிகளுக்கு பெரும் மன உளைச்சலையும், அழுத்தத்தையும் தரக்கூடும் என்ன உளவியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

நீட் விஷயத்தில் மக்கள் வெறுப்பினை சம்பாதித்திருக்கும் மத்திய அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் கற்பித்திருப்பார்களா என்பது மே 23 ம் தேதி தெரிந்து விடும்

—– செய்திகளுக்காக கோபி செல்வராஜ்

ஹலோ, யோவ் செல்வராஜூ,, இன்னும் நியூஸ்ல காரம் வேணும்யா. ரொம்ப மைல்டா இருக்கு..

ஸார், ஹிந்து பத்திரிக்கைல கூட நீட் பிரச்னையே இல்லாமல் நல்லா நடந்திச்சுன்னு போட்டுருக்காங்க ஸார். அவங்களே சொல்லும்போது நம்மாலே இதுக்கு மேலே காரம் ஏத்துறது கஷ்டம் சார்.!!

கற்பனை: சுவாமிநாதன் சுப்பிரமணியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories