ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருத்தனால்தான்… இது முடியும்!

Published:

sam pitroda rahul - 2026

ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார்…

அப்போது அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது…என்ன விஷயம் என்று விசாரித்தார் ராகுல்…ஒருவருக்கு மாரடைப்பு என்றும் அதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதாகவும் ஆம்புலன்ஸ் டிரைவர் கூறினார்,..

டாக்டரிடம் வேண்டாம்..நோயாளியை நானே குணப்படுத்துகிறேன் என்று சொன்ன ராகுல் உடனடியாக ஆம்புலன்சுக்குள் ஏறினார்…அந்த ஆம்புலன்சுக்குள்ளேயே வைத்து அந்த நோயாளிக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்தார்…

ஆபரேஷன் முடிந்தவுடன் கண்விழித்த நோயாளி , கண்ணீர் மல்க ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தார்…

பின்னர் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாம் பிட்ரோடா , ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் , டாக்டருக்கு படிக்காமலே அறுவை சிகிச்சை செய்யலாம்.. ராகுல் மட்டுமல்ல… ஒட்டுமொத்த நேரு குடும்பத்தினரும் டாக்டர்கள்தான்..ராஜீவ் காந்திதான் இந்தியாவின் முதல் அறுவை சிகிச்சை செய்தவர் என்ற அரிய தகவலையும் வெளியிட்டார்…

( என்ன சிரிப்பு? பள்ளிப்படிப்பையே தாண்டாத ராஹூல் ஹெலிகாப்டரை பழுதுபார்த்தார்னு சொன்னா நம்புறீங்க… இதை நம்பமாட்டீங்களா? )

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

கற்பனை – சரவணகுமார் (Saravana Kumar)

Related articles

Recent articles

spot_img