மறுபடியும் முதல்ல இருந்தா..? மீண்டும் அதிமுகவிற்கு தாவிய நடிகர்!

Published:

ratharavi - 2026தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக திகழும் நடிகர் ராதாரவி, திமுக., அதிமுக., என மாறி மாறி பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் திமுக.,வில் இருந்தவர், பின்னர் அதிமுக., பக்கம் போனார். முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி மீண்டும் திமுக.,வில் இணைந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்தார். இது சர்ச்சையானது. இதையடுத்து, ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் திமுக.,வின் மீது அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மீண்டும் தன்னை அதிமுக.,வில் இணைத்து கொண்டார் ராதாரவி. அவருடன் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்தார்.

Related articles

Recent articles

spot_img