SELFE 5 - 2026

மனைவியுடன் தகராறு தற்கொலைக்கு முயன்ற கணவனை காப்பாற்றி செல்பியால் பரபரப்பு…….!

செல்பி மோகத்தால் உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளில் முதலாதவது இடத்தை பிடித்துள்ள விஷயம் நம்மை வருத்தப்பட செய்யும் செய்தி. ஆனால் தற்போது செல்பி மோகத்தால் உயிர் பிழைத்த சம்பவம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பலரின் வாழ்கையே ஒரு செல்பியால், அடுத்த நெடியே பரிதாமாக பறிபேனானதும் உண்டு.

நாம் எதார்த்தமாக வாழ்கையில் புகைப்படங்களை நின்று ரசிக்கும் வகையில் எடுத்த போது, அடுத்த நெடியே கூற்றுவன் கூவி வந்து அவனையும் தூக்கி சென்றுள்ளான்.

குடும்ப பிரச்னையால் தன் உயிரை மாய்த்துக் கொள்ளவதாக செல்பி எடுத்து அனுப்பினார்.

இருந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் இவர் காப்பாற்றப்பட்ட விசிஷயம் தான் தற்போது டிரெண்டிங் ஆகியுள்ளது.

செல்பியால் பல உயிர்பறிபோனது:
பலர் செல்பி எடுக்க மலையேற்றங்களில் நின்று எடுத்தனர். அப்போது, எதிர்பாரதவிதமாக தடுக்க விழுந்து இறந்ததும் உண்டு.

சிலர் தண்டவாளத்தின் அருகேவும் ரயில் செல்லும் முன் செல்பி எடுக்க முயன்ற போது, அவர்களின் உயிர் அடுத்த நொடியே பஸ்பம் ஆனதும் பார்த்து இருப்போம்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும், செல்பியால் குடும்ப உயிரிழந்து சோகத்தில் முழ்கியதையும் பார்த்து இருக்கின்றோம்.

ஆனால் ஓரே ஒரு செல்பியால் பல்வேறு சம்பவங்களில் பலரின் உயிர்கள் பரிபோனதும் உண்டு என்பது இருக்கட்டும்.

தற்போது குடும் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ள சென்ற ஒருவர் எடுத்த செல்பி உயிரை காப்பாற்றியும் உள்ளது.

இது பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் நடந்துள்ளது கேரளாவில் தான்.

கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த இளைஞர் மணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கும் இவர் மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் வெறுப்படைந்த போன மணி, தன் வாழ்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தார்.

நேராக சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகே வந்தார்.

யாருமற்ற இடத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு, வாழ்கையே ரொம்ப வெறுப்பாக இருக்கு நண்பர்களே. வாழ்ந்தது போதும், அதனால் தற்கொலை பண்ணப்போறேன் என்று பேசியபடி செல்பி எடுத்தார்.

அதை தனது நண்பர்களுக்கு அனுப்பிவிட்ட தண்டவாளத்தில் படுத்துவிட்டார்.

செல்பி வாட்ஸ் ஆப் குரூப்களில் சேரானது:
இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

மணி எங்கு தண்டவாளத்தில் படுத்து கிடக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முயன்றனர்.

அதற்காக செல்பியை உடனடியாக பல வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட குரூப்களில் சேர் செய்தனர்.

அப்போது அவர் எடுத்த செல்பியில் ஒரு மைல் கல் காணப்பட்டது.

அப்போது அவர் எடுத்த செல்பியில் 82 என்ற எண் தெரிந்தது. அதை வைத்து ரயில்வே அதிகாரிகளை கொண்டு விசாரித்தனர்.

அது சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகில் உள்ள இடம் என தெரியவந்தது.

உடனடியாக அங்கியிருந்த கேட் கீப்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியை சேந்த சிலரை அழைத்துக் கொண்டு சிலர் சென்றனர்.

ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக் கொண்டிருந்த மணியை போலீசார் மீட்டனர்.

குடும்ப பிரச்னைக்கு தற்கொலை தீர்வாக என்று போலீசார் நீண்ட நேரம் கவுன்சிலிங் கொடுத்து வழக்குபதிவு செய்யாமல் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending