December 6, 2025, 3:58 PM
29.4 C
Chennai

தாத்தா அல்ல..! ஸ்டாலினை தலைவர் என்றே அழைக்கிறாராம்… இன்பநிதி!

stalin udaya inba - 2025

தாத்தா அல்ல.. மாமா என்று திருத்தினார் மு.க.ஸ்டாலின்! எப்போது? தேர்தலுக்காக அண்மைக் கால கிராமசபை பஞ்சாயத்து மேடைகளில் கலந்து கொண்ட போது, ஒரு சிறுமி ஸ்டாலினைப் பார்த்து தாத்தா என்று கூற… அதற்கு ஸ்டாலின், நான் தாத்தா இல்லை, மாமா என்று திருத்தினார்.

… ஆக தாத்தா ஆவதில் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லை போலும்! காரணம் சொந்த பேரனே கூட அவரை தலைவர் என்றுதான் அழைத்தாக வேண்டும்! அப்படித்தான் திமுக., குடும்பத்தில் வளர்க்கப் பட்டிருக்கிறார்கள்?!

1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா டுடே இதழில் ஸ்டாலினிடம் எடுக்கப் பட்ட பேட்டியில் இருந்து…

திமுக., –  காங்கிரஸ் அல்ல… முக ஸ்டாலின் பேட்டி!

மு க ஸ்டாலினை, இதழ் ஆசிரியர் மாலன் சந்தித்தபோது கண்ட பேட்டி |

கேள்வி: இளைஞரணி தன் கிளைகளை விஸ்தரித்துக்கொள்ள தலைமை கழகம் அனுமதித்திருப்பதன் காரணங்கள் என்ன?

பதில்: எதிர்க்கட்சியாக இருந்தபோது தலைவர்கள் கட்சி பணி மட்டுமே செய்து வந்தனர்! ஆளுங்கட்சியாக ஆனபின் அமைச்சராக எம்எல்ஏவாக அரசுப் பணியும் செய்து வருகிறோம். கட்சிப் பணிக்கு வேண்டிய நேரம் கிடைப்பதில்லை இதனால் மக்களுக்கும் கட்சிக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி இடைவெளி இல்லாமல் இருக்க இளைஞரணி உதவும்.1983இல் இருந்தே ஒன்றிய அளவில் அமைப்புகள் ஏற்படுத்த தலைமையிடம் அனுமதி கேட்டு வந்தோம்! இப்போதுதான் கிடைத்திருக்கிறது!

கேள்வி:  இதன் மூலம் இளைஞர் அணிக்கு என்று ஒன்றிய அளவில் இருந்து தலைமை நிலையம் வரை நிர்வாகிகள் ஏற்படுவார்கள். அப்போது இது கட்சிக்குள் இன்னொரு கட்சி ஆகாதா?

பதில்: இளைஞர் அணி என்பது இணை அமைப்பல்ல துணை அமைப்பு! இதன் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்

கேள்வி: இளைஞரணி உறுப்பினர்களுக்கு கட்சியின் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டா?

பதில்: ஒவ்வொரு சாதாரண திமுக உறுப்பினருக்கும் அந்த உரிமை உண்டு. இளைஞர் அணியினர் திமுக உறுப்பினர் தானே?!

கேள்வி: இளைஞர் அணிக்கு கடந்த தேர்தலில் எத்தனை சீட்டுகள் கொடுக்கப்பட்டன?

பதில்: 13 இடங்கள் தரப்பட்டன. பன்னிரண்டில் வென்றோம்.

கேள்வி: மற்ற அணிகளுக்கு எவ்வளவு இடங்கள் தரப்பட்டன?

பதில்: அணிகளின் அடிப்படையில் அல்ல, வெற்றி வாய்ப்பை எடைபோட்டு இடங்கள் தரப்பட்டன.

கேள்வி: அவசியம் ஏற்பட்டால் தந்தையின் இடத்திற்கு நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்களா?  ராஜீவ் காந்தியை போல?

பதில்: காங்கிரஸ் ஜனநாயக ரீதியான இயக்கமல்ல! அங்கு எதுவும் நடக்கலாம். திமுக அப்படியல்ல… தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும்! என்னைவிட ஆற்றலும் அனுபவமும் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒதுக்கி விட்டு என்னை தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை!

இவ்வாறு இந்தியா டுடே பத்திரிகையில் 1989 செப்டம்பர் மாதம் மு க ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

stalin old pic - 2025

இந்தக் கட்டுரையின் ரிப்போர்ட்டில் சில தகவல்கள் இப்போதும் கண்ணில் பளிச்சென படுகின்றது.

.. புதிய அனுமதியின் மூலம் கட்சியில் ஸ்டாலின் கை ஓங்க கூடிய வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

கருணாநிதி தன் மகனை வாரிசாக உருவாக்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.

திமுக என்பது உட்கட்சி ஜனநாயகம் கொண்ட அமைப்பு என்பது ஒரு கண்துடைப்பு கருணாநிதி தனக்குப் பின் தன் மகன் பொறுப்பிற்கு வர வேண்டும் என்று விரும்புகிறார் அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார் என்கிறார் சோ.

கலைஞர் தன் வாரிசாக ஸ்டாலினை உருவாக்குகிறார். இதன் முதல் கட்டமாக மதுரை திருச்சி கோவை மாவட்டங்களில் உள்ள பேராசிரியர் ஆதரவாளர்களை தோற்கடித்தார். இதனால் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு இருக்கிறது; இது விரைவில் வெடிக்கும் என்கிறார் கட்சியின் ஒரு மூத்த எம்எல்ஏ!

நாங்கள் கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள்; ஸ்டாலினை அல்ல என்கிறார் இன்னொரு கட்சி பிரமுகர்

திமுக துணைப் பொதுச் செயலாளரும் வருவாய் துறை அமைச்சருமான நாஞ்சில் மனோகரன் இந்த செய்திகள் எல்லாம் முற்றிலும் கற்பனை கட்சி கட்டுப்பாட்டையும் அது அடைந்துள்ள வெற்றியையும் கண்டு பொறாமைப் படுகிறவர்கள் கட்டிவிடும் கதை என்று மறுக்கிறார்!

ஸ்டாலினே கூட நான் எனது அப்பாவை அப்பா என்று கூட கூப்பிடுவதில்லை! தலைவர் என்று தான் கூப்பிடுகிறேன்! அவரும் நானும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறோம் என்றாலும் கூட என்னுடன் பேசக் கூட அவருக்கு நேரம் இருப்பதில்லை; கட்சிக் கூட்டங்களிலும் அரசு விழாக்களிலும் தான் பார்த்துக்கொள்கிறோம் என்கிறார்!

ஸ்டாலின் மட்டுமல்ல கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இருந்து அவரின் பேரன் உதயநிதி, அதாவது ஸ்டாலினின் மகன் வரை கலைஞரின் வீட்டில் அவரை தலைவர் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்!

*** இப்போது இதே போன்ற ஒரு பேட்டி எடுக்க, உதயநிதியிடமும், தொடர்ந்து இன்பநிதியிடமும் மைக் பிடிக்க ஒரு பெரும் கூட்டமே தயாராக இருக்கும்தான்!

இதே போல் ஒருவர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேட்கிறார். இந்த வீடியோ பதிவில் ஸ்டாலின் சொல்லும் பதிலும் இன்றைய நிலையும் இப்போது வைரலாகி வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories