December 5, 2025, 8:36 PM
26.7 C
Chennai

அரசுப்பள்ளியில் அம்மா நோட்டிற்கு பதில் கருணாநிதி நோட்டுகளா ? செந்தில் பாலாஜி மாவட்ட செயலாளராக இருந்தால் இந்த நிலை இருந்திருக்க முடியுமா ? பொங்கும் கரூர் மாவட்ட அ.தி.மு.க வினர்

04-06-16 Karur Admk Ex Minister Ex News photo 01 04-06-16 Karur Admk Ex Minister Ex News photo 02

தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனார். இந்நிலையில் கடந்த 1 ம் தேதியே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் விலையில்லா சீருடைகள், விலையில்லா நோட்டு புத்தகங்கள் ஆகியவைகள் கொடுத்தனர். ஆனால் இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 119 பள்ளிகளில் கொடுக்கப்பட்டது. ஆனால் நேற்று தமிழக அளவில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தை கொண்டாடினாலும், கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மந்த நிலையிலேயே கொண்டாடப்பட்டது. ஆனால் கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் திமுக தலைவர் கருணாநிதி 93 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் அதுவும் அம்மா நோட்டு புத்தகங்களுக்கு பதில் கருணாநிதியின்  நோட்டு புத்தகங்களா ? என்று தற்போது பிரச்சினை ஏற்பட்டதோடு, முன்னாள் மாவட்ட செயலாளர் வி.செந்தில் பாலாஜி மாவட்ட செயலாளராக இருந்திருந்தால் இது போன்ற செயல்கள் நடைபெற்று இருக்குமா ? என்றும் அ.தி.மு.க வினரே கேள்வி எழுப்பியுள்ளனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு சில இடங்களில் பெயரளவிற்கு கொடியேற்றி நோட்டு புத்தகம் அதுவும் விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கும் அரசுப்பள்ளியில் அதுவும் கருணாநிதியின் புகைப்படம் அடங்கிய நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரம் கடைவீதியில் நடந்த திமுக  கொடியேற்று விழாவிற்கு ஒன்றிய அவைத்தலைவர் மொஞ்சனூர் பழனிச்சாமி வரவேற்றார். திமுக ஒன்றிய செயலாளர் கருணாநிதி தலைமை வகித்து கழக கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.

திமுக ஒன்றிய தி.மு.க செயலாளர் கருணாநிதி தலைமை வகித்து கழக கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கி எலவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.

விழாவில் தி.மு.க மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள் முன்னாள்இ இன்னாள்இ நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தற்போது முடிந்து போன இந்த விஷயம் பூதாகரமாகியுள்ளது. ஏனென்றால் கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர் பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜி தான், தி.மு.க அரசின் போதும், அம்மா படத்தை கொடுத்து பிரச்சினையை கிளப்பியதோடு, அதே தி.மு.க ஆட்சியிலே தற்போதைய முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி விழாக்கோலம் பூண்டது போல், விளையாட்டு போட்டிகளை நடத்தியும், சுமார் லட்சக்கணக்கான நோட்டு, புத்தகங்கள் கொடுத்தும் சிறப்பாக கொண்டாடுவார். ஆனால் மாவட்ட செயலாளர் இல்லை என்பதை தி.மு.க கட்சி சுட்டி காட்டுகிறதா ? இதே செயல் செந்தில் பாலாஜி அ.தி.மு.க மாவட்ட செயலாளராக இருக்கும் போது நடந்திருக்குமா ? என்ற கேள்வி அ.தி.மு.க வினரிடையே மட்டுமில்லாமல் பல்வேறு கட்சியினரிடையே எழுந்துள்ளது. ஆனால் இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுபட நாகை அருகே வேதாரண்யத்தை அடுத்துள்ள சிக்கல் சிங்காரவேலர் முருகன் கோயிலுக்கும், பழனி பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கும் என்று முருகன் ஆலயமாக தமிழக அளவில் உள்ள முருகன் கோயிலுக்கு சுற்றி வருகிறார் முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories