வேண்டாம் என்ற பெண்ணை வேண்டும் என்று தேர்வு செய்த ஜப்பான் நிறுவனம்!

Published:

vendam1 e1563272790842 - 2026சக மாணவர்களின் கேலி,கிண்டலுக்கு நடுவில் சாதனைப் படைத்துள்ளார் ”வேண்டாம்” என்ற மாணவி.

கிராமங்களில் பெண்குழந்தை அடுத்தடுத்து பிறந்தால் இறுதியாக பிறக்கும் குழந்தைக்கு, ”வேண்டாம்” என்று பெயர் சூட்டி பெண் குழந்தைக்கு பின் ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில்  இப்பழக்கம்  இருந்தது.vendam e1563272846479 - 2026அவ்வாறு திருத்தணி அருகே நாராயணபுரம் என்ற கிராமத்தில் அசோகன் என்பவருக்கு இரண்டு பெண்குழந்தைகள் இதனால் இவர் இரண்டாவது பெண்ணுக்கு ”வேண்டாம்” என்று பெயர் சூட்டியுள்ளார்.

அந்த ’வேண்டாம்” என்ற பெண் அருகிலுள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்து முடித்து மேற்கொண்டு பொறியியல் கற்க ஆர்வம் கொண்டுள்ளார்.vendam2 - 2026ஸ்காலர்ஸிப்பில் குன்றத்தூரை அடுத்த நல்லூரில் இயங்கி வரும் CIT கல்லூரியில் இலவசமாக கல்வி கற்கும் வாய்ப்பை பெற்ற அவர், தற்பொழுது மூன்றாம் ஆண்டு படிக்கிறார். கல்லூரியில் நடக்கும் கேம்பஸ் இண்ட்ர்வுயுவில் க்ரூபா நிறுவனத்தில் பணி செய்ய தேர்வாகியுள்ளார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இதில் வியப்பான செய்தி என்னவென்றால் அவருக்கு அடிப்படை சம்பளமே வருடத்திற்கு 22 லட்சம் ஆகும். அங்குள்ளவர்களால் பெரிதும் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார் ”வேண்டாம்” என்ற மாணவி. பலரும் அவரது பெயரினைக் கேட்டு கேலி கிண்டல் செய்த போதும் அதைத் தாண்டி சாதனைப் படைத்துள்ளார்.

இது குறித்து ”வேண்டாம்” கூறுகையில், என் பெயரால் பலமுறை நகைப்பிற்கு உள்ளான நிலையில் இப்பெயரினை மாற்ற சொல்லி பெற்றோரிடம் கூறியிருக்கிறேன். கல்லூரி முடிந்து மாற்றிக்கொள்ளலாம் என அவைர்கள் கூறினார்கள். இந்நிலையில் ”வேண்டாம்” என்ற என்னை ’வேண்டும்’ என்று ஜப்பான் நாட்டில் வேலைக்கு எடுத்துள்ளனர். இது போல் எங்கள் கிராமத்திலிருக்கும் பல ”வேண்டாம்” கள் முன்னேற வேண்டும் என்பதே என் ஆசை என்றார்,

Related articles

Recent articles

spot_img