ஸ்கிம்மர் மூலம் ஏ.டி.எம். இல் திருட்டு ! அயல் நாட்டுக் கும்பல் கைது !

Published:

skimmar 2 - 2026சென்னை துரைப்பாக்கத்தை அடுத்து கண்ணகி நகரில் ஸ்கிம்மர் கருவி வைத்திருந்த பல்கேரியா நாட்டை சேர்ந்த நிகோலா, போரிஸ், லியூம்பாபி ஆகிய 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த ஸ்கிம்மர் கருவிகள், 40 ஏடிஎம் கார்டுகள், ரூ.7 லட்சம் மற்றும் அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்தனர்.

அயனாவரம் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தியது இவர்கள்தானா என்பது குறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீலாங்கரையில் பல்கேரியா நாட்டை சேர்ந்த 2 பேர் ஸ்கிம்மர் கருவியுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img