RAILVA SELFE 4 - 2026

‘ஓடும் ரயில்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில், ‘செல்பி’ எடுத்தால், 2,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படும்’ என, ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.

செல்பி மோகத்தால், ஓடும் ரயில்களில்தொங்கியும், பயணம் செய்யும் போதும், தண்டவாளத்தின் அருகேநின்று, ரயில்கள் செல்லும் போதும், இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொள்கின்றனர்

RAILVA SELFE 2 - 2026

இதனால், உயிரிழப்புகள் அதிக அளவில் உண்டாகிறது. இதனை தடுக்கும் வகையில் இரயில் நிலைய வளாகத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நின்று ‘செல்பி எடுத்தால், 2,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படும்’ என, ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே போலீசார் மேலும் கூறியதாவது: ரயில்களில்ஆபத்தான முறையில், பயணிகள் செல்பி எடுப்பதால், வாரத்தில் சுமார் 10 பேராவது, ரயிலில்சிக்கி பரிதாபமாக உயிரிழக்கின்றனா்.

இதனால், ரயில்வே ஸ்டேஷன்கள், ஓடும் ரயில்களில்செல்பி எடுத்தால், 2,000 ரூபாய்அபராதம் விதிக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, ரயில்வே ஸ்டேஷன்களில், ஒலிபெருக்கியில் பயணியருக்கு தகவல் தெரிவித்து,

எச்சரிக்கை செய்வது மட்டுமல்லாது பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள், விழிப்புணர்வு பதாகைகள் ஒவ்வொரு இரயில்வே ஸ்டேஷன்களில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

இவை அணைத்தையும் மீறி செல்பி எடுக்கும் பயணிகளிடம் முதல் கட்டமாக ரூ.2000 அபராத தொகையாக வசூலிக்கப்படும் . இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending