சிவன் வேடத்தில் ஆலய வழிபாடு ! லாலுவின் மகன் செய்யும் லொல்லு !

அடடே... அப்படியா? இந்தியா

lalllu son - 2026பீகாரில் எதிர்க்கட்சியாக உள்ளது ராஷ்ட்ரிய ஜனதா தளம். இதன் தலைவரான முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ்.தற்பொழுது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக, லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் பதவியில் உள்ளார். ஆனால், லாலுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர் என்று கூறப்படுகிறது.lallu - 2026சிவன்போல் உடையணிந்திருந்த அவர், தன்மேல் வெள்ளை துணியை போர்த்திக்கொண்டும், இடுப்பில் புலித் தோல் போன்ற துணியை அணிந்திருந்தார். மேலும், கைகள், நெற்றி மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் திருநீறு பூசியிருந்த அவர், கழுத்தில் ருத்ராட்சை மாலைகளை அணிந்து சிவபெருமானுக்கு பால் மற்றும் கங்கை புனித நீரைக் கொண்டு வழிபட்டார்.lallu son1 - 2026தேஜ் பிரதாப் யாதவ் சிவபெருமான் போல் உடையணிந்து வழிபடுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டும் கூட அவர் இந்த மாதத்தில் இதேபோன்று உடையணிந்திருந்தார். சிவபெருமானை வழிபட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிகார் மக்களின் நலனுக்காகவும், எனது தந்தையின் நீண்ட ஆயுளுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் சிவனை வழிபட்டேன். lallu son2 - 2026வழிபாடு செய்வதன் மூலம் எல்லோரும் நிம்மதியாக, ஒற்றுமையுடன் எந்தவித வேற்றுமையும் இன்றி வாழ்வார்கள் என்று கூறினார். ஆனால் கோவிலுக்குள்ளேயே கடவுளைப் போல வேடமிட்டுக்கொள்ள அனுமதி உண்டா, இது ஆகம விதிகளை மீறியது ஆகாதா என்று பீகாரில் சர்ச்சை எழுந்துள்ளது.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

நெட்டிசன்கள், லல்லு மகனுக்கு லொள்ளு அதிகம் என சிவன் வேடமிட்டதை கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.