முறிந்த சிறகுகளில் வழிந்த சோகம் ! அந்தரங்க வாழ்வு ! மனம் திறந்த ஆண்ட்ரியா !

அடடே... அப்படியா? சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

andiriya 2 - 2026
கண்டநாள் முதல் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான ஆண்ட்ரியா. இதைத்தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
andiriya 1 - 2026
சிறந்த பாடகியான ஆண்ட்ரியா கடைசியாக விஸ்வரூபம் 2 மற்றும் வட சென்னை படங்களில் நடித்தார். அதற்கு பின் எந்த படத்திலும் அவர் நடிக்காமல் இருந்தார்.

தனக்கு இருந்த மன அழுத்தம், உடல் மற்றும் மனரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதால் சில காலம் நடிப்பில் இருந்து விலகியிருந்ததாக தெரிவித்திருந்தார்.
andiriya - 2026
ஆனால் மாதக்கணக்காய் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் அளவுக்கு என்ன மன அழுத்தம் என்று ஆண்ட்ரியா தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பங்கேற்றார் ஆண்ட்ரியா.
andiriya 3 - 2026
அப்போது முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் சோகமான கவிதைகளை வாசித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. அதனைக்கேட்ட பார்வையாளர்கள் ஏன் இவ்வளவு சோகம் என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, திருமணமான ஒரு நபருடன் நான் தவறான உறவு வைத்திருந்தேன்.

அந்த நபர் என்னை உடலளவில் மிகவும் காயப்படுத்தினார். நான் செய்த தவறால் என் வாழ்க்கையே இருண்டு போய்விட்டது. உடலாளும் மனதாலும் காயப்பட்டிருந்த நான் அந்த துயரத்தில் அடக்க முடியாமல் எழுதிய கவிதைகள் தான் இவை என உருக்கமாக தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.
Andrea 5 - 2026
ஆண்ட்ரியா மாதக் கணக்காய் மன அழுத்தத்திற்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றதன் காரணம் இதுதான் என தெரியவந்துள்ளது. தற்போது புதிய மனுஷியாய் எழுந்து வந்திருப்பதாகவும் கூறினார் ஆண்ட்ரியா.
andiriya 4 - 2026
நேர்கொண்ட பார்வை படத்தின் அபிராமி கதாபாத்திரம் நடிகை ஆண்ட்ரியாவின் நிஜ வாழ்க்கை சம்பவங்களை ஒத்து இருக்கிறது.

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் அபிராமி கதாபாத்திரம் சந்தித்த பிரச்சினைகளைத்தான் நிஜ வாழ்க்கையில் நடிகை ஆண்ட்ரியா அனுபவித்திருக்கிறார்.
Andriya 6 - 2026
ஆண்ட்ரியாவின் இந்த கதையை கேட்கும் போது நேர்கொண்ட பார்வை படத்தில் வரும் அபிராமியின் கதாபாத்திரம் தான் நினைவுக்கு வருகிறது. அந்த படத்தில் அவரது பெயர் பெமிதா. தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயையும், மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியையும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெமிதாவுக்கு இருக்கிறது.
andrea 7 - 2026
பெமிதா, அவருடன் வயதில் மூத்த (அதிக வயது வித்தியாசமுடைய), ஏற்கனவே திருமணமான ஒருவருடன் உறவு வைத்திருப்பார். படத்தில் இதை அவரது எதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வர். இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாவார் பெமிதா.
andrea 8 - 2026
நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரிஜினலான பிங்க் படத்தில் பெமிதா கதாபாத்திரம் இந்த அளவுக்கு விவரிக்கப்பட்டிருக்காது. ஆனால் தமிழில் இயக்குனர் வினோத் இதனை மிக விரிவாக காட்டி உள்ளார். தற்போதைய சூழலில் இளம் பெண்கள் அதிக வயதுடைய ஆண்களுடன் லிவிங்டூகெதர் உறவுமுறை கொள்வது அதிகரித்து வருவதை உணர்த்துவதற்காக, இதை அவர் செய்திருக்கிறார்.

2 thoughts on “முறிந்த சிறகுகளில் வழிந்த சோகம் ! அந்தரங்க வாழ்வு ! மனம் திறந்த ஆண்ட்ரியா !”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.