காலத்தில் செய்த உதவி ! காலை தொட்டு வணங்க செய்யும் !

Published:

women - 2026
மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர், மாவட்ட நிர்வாகம் ஆகியோர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களாக மகாராஷ்டிராவின் சங்கிலி, கோல்ஹாபூர், சதாரா ஆகிய மாவட்டங்கள் பெரும் கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளன. இங்குள்ள அணைகள் நிரம்பியதை தொடர்ந்து, தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து, தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

புனே, சோலாபூர் ஆகிய பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று, வீடியோ வடிவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், பொதுமக்கள் சிலரை மீட்டு படகுகளில் ராணுவ வீரர்கள் அழைத்துச் செல்கின்றனர். அந்தப் படகில் இருந்த பெண் ஒருவர், ராணுவ வீரர்களின் கால்களைத் தொட்டு வணங்குகிறார்.

Heart warming video from #sangli where a woman pays gratitude by touching soldiers’ feets for rescuing them#Floods2019 #FloodSangli @adgpi pic.twitter.com/FIp7nTXyao

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

— Neeraj Rajput (@neeraj_rajput) August 10, 2019

Related articles

Recent articles

spot_img