Breaking News
சென்னையில் பரபரப்பு! நடந்தது என்ன? தொழிலதிபர் ரீட்டா தற்கொலை!
ரீட்டா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை. தொழில் ரீதியாக கணவருடன் ரீட்டாவுக்கு பிரச்சனைகள் இருந்ததாகவும் அதன் காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அஞ்சே நிமிசம்… அவ்ளோதான்! டிக்கெட் மொத்தமும் ஃபுல்!
பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சிக்கு செல்லும் ரயில்களின் டிக்கெட்கள், முன்பதிவு துவங்கிய 5 நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு, காலியாகி விட்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பொங்கலுக்கு ஊருக்கு போகணுமா?! ரயில்களில் முன்பதிவு இன்று தொடக்கம்!
பொங்கல் பண்டிகைக்காக மற்ற ஊர்களுக்குச் செல்வதற்கு, ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
வாகன விற்பனை சரிவுக்கு ஓலா, உபரும்கூட காரணம்: நிர்மலா சீதாராமன் சொன்னதும் விளைவும்!
எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய், காங்கிரஸின் சமூகத் தள ஊடகத்தில் மிக மோசமான கருத்து பதிவிடப் பட்டிருந்தது. அது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“வெள்ரிக்கா தாரோம்…” ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜியின் ‘ஃப்ரீ ஆஃபர்’!
'வெள்ளை அறிக்கை எல்லாம் கிடையாது,
வெள்ளரிக்காய் வேண்டுமென்றால் தருவோம்'..
ஸ்டாலினுக்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி!
பாம்பு தந்த பரபரப்பு! தலைமை செயலகம்!
அந்த பாம்பு யாரையும் கடிப்பதற்கு முன், ஊழியர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நல்ல பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூவத்திற்காக வெளிநாடு போன ஸ்டாலினே! சுத்தமானதா கூவம்? அமைச்சர் ஜெயக்குமார்!
அதிமுக ஆட்சியில் தான் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வந்துள்ள நிலையில், ஸ்டாலின் பாராட்டு விழா நடத்தினால் ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்க வசதியாக இருக்கும் என்றார்.
20 ஆண்டு பிரிந்த மகன்! பெற்றோருடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!
தற்போது, நாகேஸ்வர ராவின் மகனுக்கு 22 வயதாகிறது. அமெரிக்காவில் உள்ள தங்கள் மகனை.மீட்டு தங்களுடன் சேர்த்து வைக்கும்படி, நாகேஸ்வர ராவ் தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
குண்டு ஒண்ணு வைச்சுருக்கேன்! வெடி குண்டு ஒண்ணு வைச்சுருக்கேன்! ஐடி நிறுவனத்திற்கு மிரட்டல்!
சென்னை கந்தஞ்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து பதற்றமான சூழல் உருவானது.சென்னை கந்தன்சாவடியில் 13 அடுக்கு மாடிகளைக் கொண்ட ஐடி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அந்நிறுவனத்தின் காவலர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர்.' அந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கப்போகிறது.' என்று கூறியுள்ளார்.இதையடுத்து காவலர்கள் மூலமாக இந்த விஷயம் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வர காவலர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் வந்த காவல்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம் தொலைபேசியில் அழைத்த அந்த மர்மநபர் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கலுக்கு ஊருக்கு போவணுமா? ரயில் முன்பதிவுக்கு இப்பவே களத்துல இறங்குங்க..!
தீபாவளி இன்னும் வரல… அதுக்கே ஊருக்கு போவுறதுக்கு முன் பதிவு செய்ய நாங்க பட்ட பாடு இருக்கே… என்று விழி பிதுங்கி நிற்கிறீர்களா? இதோ வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கான உங்கள் முறை!
முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா; ஸ்டாலின் அறிவிப்பு.!
முதலீடுகள் குறித்து 2 நாட்களில் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் சொல்ல வேண்டும்.
“எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்!” – புகழேந்தி விவகாரத்தில் டிடிவி தினகரன் விரக்தி!
கட்சியில் பல்வேறு பிரச்னைகளைச் சொல்லி தன்னிடம் விரக்தியில் முறையிட்டவர்களுடன் தாம் பேசியதாகவும், அதிருப்தியில் இருந்தவர்களை சமாதானப்படுத்தவே அவ்வாறு தான் பேசியதாகவும் புகழேந்தி கூறியுள்ளார்.