பாம்பு தந்த பரபரப்பு! தலைமை செயலகம்!

உள்ளூர் செய்திகள் சென்னை
Chief Secretariat - 2026

தலைமைச் செயலக வளாகத்திற்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தால், அங்குள்ள ஊழியர்கள் பதறியடித்து ஓடினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நான்காவது நுழைவாயிலில், ஒரு நல்ல பாம்பு படம் எடுத்தபடி இருந்தது. அதனைப் பார்த்த தலைமைச் செயலக ஊழியர்கள் பயந்து பதறியடித்துக் கொண்டு ஓடினர்.

snake 1 - 2026

அந்த பாம்பு யாரையும் கடிப்பதற்கு முன், ஊழியர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நல்ல பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.