
5 நிமிடங்களில் காலியான பொங்கல் ரயில் டிக்கெட்கள்.
பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சிக்கு செல்லும் ரயில்களின் டிக்கெட்கள், முன்பதிவு துவங்கிய 5 நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு, காலியாகி விட்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இன்னமும் தீபாவளிக்கே தயாராகாத நிலையில், பொங்கலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய பலரும் முண்டியடித்தனர். கடைசிக் கட்டத்தில் ரயில்களில் இடம் இல்லாமல் படும் பெரும் சிரமங்களை நினைத்துப் பார்த்து, இன்றே முன்பதிவு செய்ய வேண்டும் என்று பயணிகள் மிகவும் முண்டியடித்து வந்தனர். இருப்பினும், மிக நீண்ட வரிசைகளினூடே, தென்மாவட்ட ரயில்களுக்கான முன்பதிவு 5 நிமிடங்களில் நிறைந்துவிட்டதால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
2020 பொங்கல் பண்டிகைக்கான (ஜனவரி 15) ரயில் டிக்கெட் முன்பதிவு விவரம்:
ஜனவரி.10ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 12.
ஜனவரி.11ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 13.
ஜனவரி.12ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 14.
ஜனவரி.13ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 15.
ஜனவரி.14ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 16.



