சுபாஷிதம்: ஞானத்தில் ஆர்வம்! செல்வத்தில் திருப்தி!

Published:

subhashitam
: subhashitam

ஸ்பூர்த்தி பதம் – வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும்
108 ஞான முத்துக்கள்
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

12. கண்ணோட்டம்!

ஸ்லோகம்:

அதோத: பஸ்யத: கஸ்ய மஹிமா நோபசீயதே |உபர்யுபரி பஸ்யந்த: சர்வ ஏவ தரித்ரதி ||
– ஹிதோபதேசம்.

பொருள்:

கீழே பார்த்துக் கொண்டு நடப்பது வினய குணம் உள்ளவர்களின் இயல்பு. இந்த நற்குணத்தினால் யாருக்குத்தான் உயர்வு வராது? அகங்காரம் கர்வம் தலைக்கேறி மேலே பார்த்துக்கொண்டே நடப்பவர்கள் அந்த உயர்வை இழந்த வறியவர்களே!

விளக்கம்:

ஞானத்தில் நம்மை விட உயர்ந்தவர்களோடும் செல்வத்தில் நம்மை விட தாழ்ந்தவர்களோடும் ஒப்பிடும்போது பணிவு, திருப்தி, ஞானம் பெறவேண்டும் என்ற ஆர்வம் – போன்றவை உண்டாகும். கர்வத்தோடு நடந்துகொள்வது தீமை பயக்கும் என்பதை விளக்கும் ஸ்லோகம் இது.

இந்த சுலோகம் செல்வத்தில் மட்டுமின்றி ஞானத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறுகிறது. சிலர் அறிவாற்றலில் தம்மை விடத் தாழ்ந்தவர்களைப் பார்த்து தாமே மகா மேதாவி என்று நினைத்து கர்வமுறுவர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

தம்மை விட உயர்ந்த அறிவாளிகளை எதிர்கொள்ளும் போது தம் அறிவு எத்தனை அற்பமானது என்று உணர்வர். ஞானம் பெறுவதற்கு இது போன்ற கண்ணோட்டமே தேவை.

செல்வத்தில் தன்னைவிட கீழானவர்களோடு ஒப்பிட்டால் ஏழைகளிடம் இரக்கம் ஏற்பட்டு அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் வரும்.

ஞானத்தைப் பெறுவதில் எப்போதும் ஆர்வத்தோடு விளங்கவேண்டும். செல்வத்தை பொருத்தமட்டில் திருப்தியோடு விளங்க வேண்டும் என்பது மூத்தோர் சொல்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img