“மழையே பெய்யவில்லை.தண்ணிர்ப் பஞ்சம்.நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை;மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய் வழிந்தது கண்ணீர்
. (மழை பெய்ய ஒரு பதிகம் “மேக ராகக் குறிஞ்சி”
(பெரியவாளின் வாக்கு,நிரந்தரமான பலன்கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ம் வந்தார். அத்யந்த பக்தர். தொழில் வர்த்தகமேயானாலும், நெஞ்சில் ஈரப்பசை இருந்தது.“என்னுடைய வியாபாரம் நன்றாக நடக்கணும்” என்று கேட்கவில்லை; ;எசமானே! மழை இல்லாமல் சனங்கள் கஷ்டப்படறாங்க. பெரியவங்க அனுக்ரகம் பண்ணணும்’ என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.
பெரியவாள் கனிவுடன் பார்த்தார்கள்.
“அகண்ட காவேரிக் கரையில், திருப்பராய்த்துறை என்று ஒரு சிவக்ஷேத்திரம் இருக்கு.பாடல் பெற்ற ஸ்தலம். தேவாரப் பதிகங்களில் ,திருப்பராய்த்துறை ஸ்வாமி பேரில் ஒரு பதிகம் இருக்கு ஓதுவார்களுக்குத் தெரியும் அந்தப் பதிகத்தை, மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில் சில நாட்கள் பாடி வரச்சொல்லலாம்.மழை பெய்யும். ஜனங்கள் சௌக்கியமா இருப்பா….”
பெரியவாளின் வாக்கு,நிரந்தரமான பலன் கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.
தேவைப்பட்டால், இன்றைக்கும்,திருப்பராய்த்துறை பதிகத்தை மேகராகக் குறிஞ்சியில் பாடி மழையைக்கொண்டுவரலாமே?
பக்தர்களுக்கு நினைவிருந்தால் சரி.
மெம்பர்களுக்காக அந்தப் பதிகம். கீழே.



