`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர் (stratosphere) தானே” -பெரியவா

`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர்  (stratosphere) தானே” -பெரியவா  

(விண்வெளியில் உயரே செல்லச் செல்ல, விமானம் எதிர்கொள்ளும் தட்பவெட்ப மாற்றங்களை விவரித்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு சூழலுக்குச் சென்றதும், விமானத்தின் ஒலி பூமியை அடைவதில்லை -என்று விளக்கின விஞ்ஞானிக்கு பெரியவாளின் பதில் மேலே)  

(முகம் வெளிறிப்போன  இளம் விஞ்ஞானி)    

வருடம் 1958. மகா பெரியவா சென்னையில் முகாமிட்டிருந்த நேரம். ஒரு நாள் இரவு, நகர்ப்புற பயணமாக மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.

விமான நிலைய வாயிலில் நின்றிருந்த அதிகாரிகள் வரவேற்க, பெரியவா விமான நிலையத்துக்குள் சென்றார். உடன் வந்த பக்தர்களும் கூடவே சென்றார்கள். சுவாமிகள் விமானத்துக்குள் சென்று பார்க்க ஏற்பாடாயிற்று. “நீங்களெல்லாம் விமானத்துக்குள் வரவேண்டாம்… இங்கேயே இருங்கோ…” என்று பக்தர்களுக்கு உத்தரவு இட்டுவிட்டுச் சென்றார் பெரியவா.

ஆனால், பெரியவா விமானத்துக்குள் இருப்பது போல் படம் எடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வமிகுதியில், கோஷ்டியில் கேமராவும் கையுமாக இருந்த புகைப்படக்காரர், பலர் தடுத்தும் கேட்காமல் சுவாமிகளுக்குப் பின்னால் சென்றார். திரும்பிவரும்போது முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு வந்தார்!

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 12 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

நடந்தது இதுதான். பெரியவாளுக்குத் தெரியாமல் விமானத்துக்குள் சென்று, அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்த அவரைப் படமெடுத்திருக்கிறார் புகைப்படக்காரர். ஃப்ளாஷ் வெளிச்சத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பெரியவா, ‘நான் சொன்னதற்குப் பிறகும் நீ ஏன் இங்க வந்தே’ என்பது போல் புகைப்படக்காரரைப் பார்த்திருக்கிறார். புகைப்படக் காரருக்கு சப்தநாடியும் ஒடுங்கிப் போயின!

“ஏர்போர்ட் உள்ளே, அதுவும் விமானத்துக்குள்ளே பர்மிஷன் இல்லாம போட்டோ எடுக்கக் கூடாதுன்னு உனக்குத் தெரியாதா” என்று மகா பெரியவா கேட்டதும் வெலவெலத்துப் போனார் புகைப்படக்காரர். “அப்படி ஒரு சட்டம் இருக்கு இல்லியா” என்று அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு, “என்கூட வந்திருக்கான்னு பேசாம இருந்தேளா…” என்று பெரியவா கேட்டதும், அவர்களும் பதிலேதும் சொல்ல முடியாமல் சங்கடப் பட்டிருக்கிறார்கள். புகைப்படக் காரரைப் பார்த்து, “ரோலைக் கழற்றி இவாகிட்டே கொடுத்துட்டு வா…” என்று சற்றுக் கடுமையாகக் கூறியிருக்கிறார் பெரியவா.

பின்னர், விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, அருகிலுள்ள விமான நிலைய வானிலை ஆய்வுக் கூடத்துக்கு விஜயம் செய்தார் பெரியவா. அங்கிருந்த அதிகாரிகள், அவரவருக்கு உரிய பகுதிக்கு சுவாமிகளை அழைத்துச் சென்று, பல்வேறு நுணுக்கங்களை விளக்கிக்கொண்டிருந்தனர்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 13 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இளமைத் துடிப்புடன் காணப்பட்ட ஒரு விஞ்ஞானி, விண்வெளியில் உயரே செல்லச் செல்ல, விமானம் எதிர்கொள்ளும் தட்பவெட்ப மாற்றங்களை விவரித்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு சூழலுக்குச் சென்றதும், விமானத்தின் ஒலி பூமியை அடைவதில்லை என்று கூறினார்.

“ஏன் அப்படி” என்று தெரிந்துகொள்ள பெரியவா ஓரிரு கேள்விகள் கேட்க, அதை அறிவுபூர்வமாக ஆங்கிலத்தில் விளக்கினால் பெரியவாளுக்குப் புரியாது என்று நினைத்தோ என்னவோ, சரியாக விளக்க முடியாமல் திணறினார்.

மகா பெரியவா அவரிடம், ‘`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர்  (stratosphere) தானே” என்று கேட்க, சட்டென்று முகம் வெளிறிப்போனாராம் அந்த இளம் விஞ்ஞானி!  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories